
(எஸ்.எல். மன்சூர்)
அண்மையில் பெய்த கடும்மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கிய இயற்கையீன் சீற்றம் தற்போது குறைவடைந்து நாட்டின் பல பாகங்களிலும் அதிகளவு குளிர்ச்சியான நிலைமை தோன்றியுள்ளது.
குறிப்பாக கிழக்கு மகாணத்திலுள்ள பல பிரதேங்களில் தற்போதைய குளிர்நிலைமை தோன்றியுள்ளதால் மக்களுக்கு ஒருவகை காய்ச்சல், தடுமல் போன்ற நோய்களும் தாக்கத் தொடங்கியுள்ளன. அதேநேரம் இரவு நேரங்களில் நுளம்புப் பெருக்கமும் காணப்படுகின்றது. நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் இப்பிரதேசங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வெள்ளத்தின் பின்னர் வடிகான்களிலுள்ள நீர் அப்படியே தேங்கி நிற்கின்றது.
ஈரலிப்பான குப்பை கூளங்கள் வீடுகளின் முன்னால் தெருவோரம் குவிக்கப்பட்டுள்ளன. பிரதேச சபையினர் வாரத்திற்கு ஒருமுறை குப்பைகளை அள்ளிச் சென்றாலும் வருகைதராத காலங்களில் குவிந்துள்ள குப்பைகள் இரவுநேரங்களில் ஏற்படும் குளிர்ச்சியான சூழ்நிலைமையினால் ஈரலிப்பான நிலைமையைத் தோற்றுவித்து நுளம்புகளின் பெருக்கம் ஏற்பட்டிருக்கலாமென மக்கள் கருதுகின்றனர்.
எனவே, தென்கிழக்குப் பிரதேசத்தில் குறிப்பாக அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இவ்வகை நுளம்புகள் பகற்காலங்களிலும் கடிப்பதாலும்; நுளம்புப் பெருகத்தைக் கட்டுப்படுத்துவதுடன், தெருவோரக் குப்பை கூளங்களை நாளாந்தம் துப்பரவாக்கும் செயற்பாட்டினையும் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து நுளம்புப் பெருக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;.
0 comments :
Post a Comment