முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் நிந்தவூர் விஜயம் செய்யவுள்ளார்.



அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலைக்கு எதிர்வரும் 15ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் விஜயம் செய்யவுள்ளார். 
அன்றைய தினம் இவ்வைத்திய சாலையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வைபவம் ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொள்வாதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையானது கடந்த 2010/2011ம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில் “சீ” தர விருதை பெற்றுக் கொண்டதை முன்னிட்டே இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை காலையில் நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலை கேட்போர் கூடத்தில் டாக்டர் எம்.பி.எம்.மாஹிர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசன் அலி, பைசால் காஸீம் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வைத்திய சாலை கடந்த சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிவுற்று சர்வதேச தொண்ட நிறுவனம் ஒன்றின் நிதியுதவியினால் மீள் கட்டுமானம் செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.
கடந்த வருடம் இவ்வைத்திய சாலைக்கு சுகாதார பிரதியமைச்சர் லலித் திசானாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் சமூகமளித்ததுடன் இவ்வைத்தியசாலையினை ஆதார வைத்திய சாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :