இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல்


இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது
எல்..சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் இராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், எல்லைப் பகுதி பாதுகாப்பு பணியில் இருந்து விடுமுறையில்  சென்ற வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் இராணுவம் அந்நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்திய தரப்பிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில், ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந் நிலையில் சர்வதேசம் இது குறித்து கூர்ந்து அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :