சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் பாலர் பாசாலையின் 17வது ஆண்டு நிறைவு விழா


(சௌஜீர் ஏ முடீன்)

சாய்ந்தமருது ஒக்ஸ்போர்ட் பாலர் பாசாலையின் 17வது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த கலை விழாவும் இன்று (12.01.2013) கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது பாடசாலைக் கீதம்இ குழு நடனம்இ அபினய நடனம்இ தனிப் பாடல்இ குழுப் பாடல்இ ஆங்கிலஇ சிங்கள பேச்சுஇ சிறு துஆக்கள் போன்ற பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை சிறார்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டு பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.

முன் பள்ளி சிறார்கள் அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் முதல்வரினால் வழங்கப்பட்டது.

ஒக்ஸ்போர்ட் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எஸ்.ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்இ கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட தொலைக்கல்வி போதனாசிரியரும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக உத்தியோகத்தருமான அல்-ஹாஜ் எம்.எம்.ஆதம்பாவாஇ விசேட அதிதியாக பாலர் பாடசாலை கல்விப் பணியக இணைப்பாளர் ஐ.எல்.எம்.அனீஸ் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :