துருக்கிய பிரதமர் ரஜப் தையூப் அர்துகான் தலைமயிலான அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையாளன உறவு வலுவடைந்து வருவதை தொடர்ந்து இரு நாடுகளும் துதுவராலயங்களை அமைக்க தீர்மானித்தது.அதற்கு அமைவாக துருக்கிக்கான முதலாவது இலங்கைத் தூதுவராக பாரதி விஜயரத்ன என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதுடன் துருக்கியில் இலங்கை தூதரகமும் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து துருக்கி இலங்கைக்கான தூதுவராக இஸ்கந்தர் ஒகாயா என்பவரை நியமித்துள்ளதுடன் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொழும்பில் முழு அளவில் இயங்கும் தூதரகம் ஒன்றை திறக்கக்வுள்ளது .
இலங்கை சுனாமியால் தாக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2005 ஆண்டு பெப்ரவரி மாதம் துருக்கிய பிரதமர் ரஜப் தையூப் அர்துகான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ”துருக்கி கிராமம்” என்ற பெயரில் வீட்டு தொகுதிகளை கொண்ட கிராமம் ஒன்றை மிதிகம என்ற பிரதேசத்தில் நிர்மாணிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது . இதன் பின்னர் துருக்கியின் உதவி பிரதமர் முஹம்மத் அலி ஷாஹின் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை வந்தார்.
இதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு துருக்கி சென்றார் துருக்கி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ஆவார்.
0 comments :
Post a Comment