அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பும் அது தொடர்பான விவாதமும் இன்று பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில் தவிசாளரினால் வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இச்சபை அமர்வில் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்தோடு சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இச்சபையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக 6 உறுப்பினர்களும்இ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக 2 உறுப்பினகர்களும் கலந்து கொண்டு பல கருத்துக்களை முன்வைத்தனர்.
0 comments :
Post a Comment