அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பிரதேசத்தில் அமைந்தள்ள மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலை இயங்குகின்றதா? இல்லையா? என்ற நிலையில் அவ்வைத்தியசாலை இயங்குவதையிட்டு மனவர்த்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அண்மையில் இவ்வைத்தியசாலைக்கு காலை 11.30 மணியளவில் சென்றபோது நான்கு வைத்தியர்கள் கடமையாற்றகின்ற இவ்வைத்தியசாலையில் ஒரு வைத்தியர் கூட இல்லாமல் இருந்ததை நேரடியாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்விடயத்தினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இடம்பெற்றபோது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று ஆலங்குளம் மக்களுக்கு விஷேடமாக அமைக்கப்பட்ட கிராமிய ஆயூர்வேத வைத்தியசாலை இன்று வைத்தியர் வராமையினால் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வைத்தியாலைக்குச் சென்று திரும்ப வேண்டிய நிலை தோன்றிக் காணப்படுகின்றது.
இவ்விரண்டு விடயங்களையும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் கவனத்திற் கொண்டு உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment