Share on

(எஸ்.எம்.அறூஸ்;)
சாய்ந்தமருது பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களுக்கு பொருளாதார அமைச்சின் கீழ் உள்ளீர்ப்பதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைப்பார்.
அம்பாரை மாவட்டத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவில் பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நியமனம் வழப்படுவதில் நீண்ட இழுபறி நிலை இருந்து வந்தது.
இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெருத்த முயற்சி எடுத்து அதற்கான நியமனக் கடிதமும் வழங்கப்படவுள்ளது. இழுபறியில் இருந்து வந்த தமக்கான நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீசுக்கு பட்டதாரி பயிலுனர்கள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment