ஜம்இய்யதுல் உலமா ஜிஹாத் குழுக்களை பலப் படுத்துகிறதாம் - ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர்


ஹலால் சான்றிதழ் தொடர்பில் அறவிடப்படும் கட்டணத்தை பயன்படுத்தி ஜிஹாத் குழுக்களை ஜம்இய்யதுல் உலமா சபை பலப்படுத்தவதாக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று சுமார் 4500 பொருட்கள் தொடர்பில் ஜம்இய்யதுல் உலமா 700 கோடியினை வருமானமாகப் பெறுகிறது. இந் நிதியினை பள்ளிகளைக் கட்டவும் ஷரீஆ மத்திய நிலையங்களை நிறுவவும் ஜிஹாத் குழுக்களை உருவாக்கி பலப்படுத்தவும் ஜம்இய்யதுல் உலமா என்ற அமைப்பு பயன்படுத்துகிறது. சிங்கள பெளத்தர்களை அழிப்பதே ஜம்இய்யதுல் உலமாவின் பிரதான செயற்பாடாகும்.

முஸ்லிம் சகோதரர்களுடன் எங்களுக்கு எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை. உலமா சபையுடனேயே முரண்பாடு உள்ளது. ஏனெனில் அவர்கள் சிங்களவர்களை சுரண்டுகின்றனர். இதனைத்தான் பன்றி இறைச்சி,பன்றியின் உடலை தவிர்த்து பன்றியின் ஏனையவற்றை வெட்டுவதென்பது.

ஹலால் என்பது இஸ்லாமிய சமயத்தின் ஒரு கொள்கையாகும். அதன் அர்த்தம் இறைவனின் பெயரைக் கூறி அறுப்பது சிறந்தது என்பதாகும். 9 வீதமான இவர்கள் 70 வீதமான சிங்களவர்களுக்கு ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். இலையாயின் எங்கள் பொருட்களை கொள்வனவு செய்யமாட்டார்களாம்.
உலமா சபையில் ஹலால் சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிஸ்கட் ,பால்மா மற்றும் அரிசி பெக்கட்டுக்களை சந்தையில் இன்று காண்கிறோம். ஹலால் என்பதைப் பதிவதால் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அதற்காக இவர்கள் அறவிடும் கட்டணமே பிரச்சினையானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :