முஸ்லிம்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்க வேண்டாம் : அசாத் சாலி

சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள  தமிழ் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி  முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா  அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற முன்னணியின் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிய பிரச்சினைகள் எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் விளைவுகள் ஆபத்தானதாகவே அமையும்.  

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில்  முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். ஆனால்இ தாக்கியவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால்இ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும்இ எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்?

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் இ முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல்இ முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என்ற பிரசாரம் என அனைத்தும் சிறிய செயல்களே என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார்.

எமது இஸ்லாம் சமயத்துடனும்இ முஸ்லிம் மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா? இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும்.

எனவேஇ முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது. அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :