2004 சுனாமி அனர்த்தத்தின் போது தென் மாகாணத்தின் பெரலிய பகுதியில் வைத்து பாதிப்புக்குள்ளான 50 ஆம் இலக்க புகையிரதம் எட்டு வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் புகையிரதத்தில் பயணித்த சுமார் 1700க்கும் அதிகமானோர் தமது உயிர்களை சுனாமிக்குப் பலி கொடுத்திருந்தனர். இப் புகையிரதம் நாளை காலை கோட்டே புகையிரத நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மத கிரியைகளைத் தொடர்ந்து பயணத்தை தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குறித்த புகையிரதத்தை படங்களில் காணலாம்சுனாமியில்பாதிக்கப்பட்ட புகையிரம் எட்டு வருடத்தின் பின் மீண்டும் சேவையில்
2004 சுனாமி அனர்த்தத்தின் போது தென் மாகாணத்தின் பெரலிய பகுதியில் வைத்து பாதிப்புக்குள்ளான 50 ஆம் இலக்க புகையிரதம் எட்டு வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் புகையிரதத்தில் பயணித்த சுமார் 1700க்கும் அதிகமானோர் தமது உயிர்களை சுனாமிக்குப் பலி கொடுத்திருந்தனர். இப் புகையிரதம் நாளை காலை கோட்டே புகையிரத நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மத கிரியைகளைத் தொடர்ந்து பயணத்தை தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குறித்த புகையிரதத்தை படங்களில் காணலாம்


0 comments :
Post a Comment