வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் களவாடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் சிலவற்றுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை - காவத்தமுன பகுதியில் வைத்து நேற்று (25) இரவு லொறியொன்றை பரிசோதனை செய்தபோது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல வகை மோட்டர்கள் 115 இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
0 comments :
Post a Comment