பத்திரிகைப் போட்டியில் பசில் பிழையான செய்திகளைப் பரப்பி இனங்களுக்கு இடையில் பேதங்களை உருவாக்கி நாட்டில் குழப்ப நிலையொன்றினை எற்படிதுவதற்கு சதிகாரக் குழுக்கள் முயற்சித்து வருகின்றன. நாட்டின் மக்கள் இது குறித்து மிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .
அதில் அவர் முஸ்லிம் மக்கள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த நாட்டு முஸ்லிம் மக்கள் நாடு இக்கட்டான நிலையில் இருந்த சந்தர்பயங்களில் எல்லாம் நாட்டுக்கு விசுவாசமாக செயல்பட்டு இருக்கிறார்கள் . எமது நாட்டுக்காக முஸ்லிம்கள் சர்வதேசத்தின் முன்நின்றார்கள் .
முஸ்லிம் மக்களும் ,முஸ்லிம் நாடுகளும் எமது நாட்டோடு வைத்துள்ள தொடர்புகளை இல்லாதொழிப்பதை சில குழுக்கள் விரும்புகின்றன . இக் குழுக்களின் சதி வலையில் எமது குழுக்கள் சிலவும் சிக்கியுள்ளன . இது தொடர்பில் பொறுமையோடு உண்மைகளை விளங்கி செயல்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .
0 comments :
Post a Comment