தென்சூடானின் வான் பரப்பிற்கு மேலாகப் பறந்த ஐ.நா இன் ஹெலிகாப்டர்

நேற்று ஞாயிற்றுக் கிழமை:
இது ஒரு தவறுதலான சம்பவம் எனவும், தமது படைகள் குறித்த சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர் தென் சூடானின் கிளர்ச்சிப் படைக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை சுமந்து சென்ற ஒரு வாகனம் எனத் தவறாகக் கணித்து துரதிர்ஷ்ட வசமாக இவ்வாறு செய்துள்ளனர் எனவும் இதனால் மிகவும் மனம் வருந்துகிறோம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

மேலும் சுட்டு வீழ்த்தப் பட்ட ஹெலிகாப்டரில் ஐ.நா ஐச் சேர்ந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்றது. இத் தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை தென் சூடான் உடனடியாக விசாரணை நடத்தி இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் அழுத்தம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த அசம்பாவிதத்துக்கு நமது இராணுவத்தின் பங்கும் உள்ளது எனவும் இதற்கு மிகவும் வருந்துவதுடன் மன்னிப்புக் கேட்பதாகவும் தென் சூடானின் இராணுவப் பேச்சாளர் பிலிப் ஆகர் கருத்துக் கூறியுள்ளார்.

தென்சூடானில் டேவிட் யாவு தலைமையில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்கு சூடான் அரசு அடிக்கடி விமானம் மூலம் ஆயுதம் அழித்து வருவதாகவும் இது தடுத்து நிறுத்தப் பட வேண்டியது எனவும் தென் சூடான் குற்றஞ் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிலிப் ஆகர் மேலும் கூறுகையில் ஐ.நா தனது வான் பரப்பிற்கு மேலாகத் தனது ஹெலிகாப்டர் பயணிக்க உள்ளதை முன்கூட்டியே தென்சூடான் இராணுவத்துக்கு அறிவிக்கவில்லை எனவும் அது தென் சூடான் தரையில் தரையிறங்க முயன்ற போது சூடானின் ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டர் போன்றே தென்பட்டதால் தான் சுட நேர்ந்ததாகவும் இதில் ஐ.நா இன் தவறும் உள்ளது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :