(எஸ்.எல். மன்சூர்)கடந்த இருவாரங்களாக பெய்து வந்த மழை வெள்ளமாக மாற்றம்பெற்று வருகின்றது. மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கில் குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்தில் மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. மழையற்ற ஒரு காலநிலை காணப்படுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நெற்காணிகளிலிருந்து நீர்மட்டம் குறைந்து வருகின்றது. வீதிகளும், வீடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது வெள்ளம் வடிந்தோடியுள்ளது. புதுவருடம் களைகட்டத் தொடங்கியுள்ள இந்நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள போதிலும் திடீர்வெள்ளம் ஏற்படுவதற்கு வீதிகளிலுள்ள வடிகான்களிளுள்ளே மண், குப்பைகள் நிறம்பியிருந்தமையே காரணம் என்றும் கூறப்படுகின்றது. அட்டாளைச்சேனைப் பிரதேச சபையினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரும் நேரடியாக வெள்ளம் ஏற்பட்ட இடங்களுக்கு சமூகமளித்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக வெள்ளம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றினைவதுதான் மக்களுக்கான ஆறுதலாக அமையும் என்பதை இவர்கள் நன்குணர்ந்துள்ளனர் போலும்.
0 comments :
Post a Comment