சம்மாந்துறை அல்-அமீன் பாலர் பாடசாலையின் விடுகை விழா

(எம்.ஐ.பிர்னாஸ்)
சம்மாந்துறை அல்-அமீன் பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் உபகரணம் வழங்கும் வைபவமும் நேற்று மாலை சம்மாந்துறை அல்-அர்சாத் வித்தியாலயத்தில் சிறப்பாக ஆசிரியை பீ.எம்.சுபைதா தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் பிரத்தியக இணைப்பாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ்,சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே.றஹ்மான்,சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், முன் பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.அச்சிமுஹம்மட்,காரைதீவு பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாராஜ்,சம்மாந்துறை இளைஞர் சேவை அதிகாரிஎம்.எச்.எம்.பைசல் அமீன் உட்பட பலபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு பட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றம் செய்து வைக்கப்பட்டது.மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கற்றல் உபகரணங்களை கந்துகொண்டஅதிதிகள் வழங்கிவைத்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :