நுரைச்சோலை வீட்டுத்திட்டம் இன்னும் 3 வாரங்களில் வழங்க ஏற்பாடு..


(எஸ்.எல்.மன்சூர்;;)
அக்கரைப்பற்று சுனாமி நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திட்டம் மக்களிடம் கையளிக்கப்டுமா?
சவுதி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அக்கரைப்பற்று அம்பாரைவீதியில் நுரைச்சோலை எனும் இடத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 500வீடுகள் கடந்த 6ஆண்டுகளுக்கும் மேலாக உரியவர்களுக்கு வழங்கப்படாமையால் சுனாமி ஞாபகார்த்;;;;த தினமான 26.12.2012அன்று காலை, சுமார் 500க்கும் மேற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பாரியளவிலான வீதிமறியல் போராட்டம் ஒன்றை நடாத்தினர். சாலைகள் மறிக்கப்பட்டு கல்முனை அக்கரைப்பற்று போக்குவரத்து ஸ்தம்பிக்;;கும் அளவுக்கு மக்கள் சாலையில் அமர்ந்து தமக்கு நீதி கிடைக்கும் வரைபோராடப்போவதாகவும் கூறி வீடுகளை உடனடியாக கைளிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சுனாமியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக நுரைச்சோலை எனுமிடத்தில் தரிசுநிலமாக காணப்பட்ட இடத்தில் சவுதி அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 500வீட்டுத்திட்டமானது முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் அவர்களின்பெரு முயற்சியினால் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இவ்வீட்டுத்திட்டத்திற்கு அண்மையாக பெரும்பான்மைச் சிங்கள மக்களும் வசிக்கின்றனர். இப்பிரதேசம் முழுமையாக வயற்காணிகளாக காணப்படுவதன் காரணமாக அயலில் முஸ்லீம் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இவ்வீட்டுத்திட்டத்தின் காரணமாக மக்கள் அப்பிரதேசத்தில் முழுமையாக வாழுகின்ற ஒருநிலை ஏற்படும் எனவும், இப்பகுதியில் வாழுகின்ற சிங்கள மக்களுடனும் இணைந்து சமாதானச் சூழல் ஒன்றை ஏற்படுத்தலாம் என்கிற நோக்கில் இங்கு வீடுகள் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் முழுமையாக முஸ்லீம் மக்களுக்காகவே இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. இறுதியில் சில அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்குள் வரவேண்டும் என்பதால் உடனடியாகவே இவ்வீட்டுத்திட்டம் கையளிக்கப்படவில்லை. இதனை நன்கு உணர்ந்துகொண்ட அப்பகுதியில் வாழுகின்ற சிங்கள பெரும்பான்மையினருக்கும் ஒருதொகுதி வீடுகள் கிடைக்கப்படல்வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர்நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத் தீர்பின் பிரகாரம் மூவினமக்களுக்கும் இவ்வீடுகள் வழங்கப்படுதல் வேண்டும் என்றும், இவ்வீட்டுத்திட்டம் உண்மையாக சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என கட்டப்படவில்லை என்றும் இக்காணி அம்பாரை சீனிக் கூட்டுத்தாபனத்திற்குரியது அவர்களிடமிருந்தே முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் காலமாவதற்கு முன்னரே இக்காணிகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதனை ஒதுக்கியிருந்தார் எனவும், காணிகள் அற்றவர்களுக்கு இக்காணிகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் தற்போது பலகோடி ரூபாய்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள நுரைச்சோலை வீடமைப்புத் திட்டம் யாருக்குமே பயனளிக்காது கடந்த பல வருடங்களாக தூசிபடிந்து, மரங்கள் முளைத்து, வீட்டுக்குள் யாருமே செல்லமுடியாதளவுக்கு புற்களும், பற்றைக்காடுகளும் முளைத்துள்ளன. உண்மையாக காணிகள் அற்றவர்களுக்கும், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இவ்வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றபோது மக்களுக்கு மிகவும் பிரயோசனமாக அமையும். அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டவில்லை என்பதையும் அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத் தொடரில் உரையாற்றும்போது பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் மிகவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கு தெரிவித்திருந்தார்.
அந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தாகத்தை இவ்வீட்டுத்திட்டம் நிறைவேற்றுமாக இருந்தால் உடனடியாக வழங்கப்படுவதே சிறப்பானதாக அமையும். இதனை வலியுறுத்தி மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டமாகவும், கவனஈர்ப்பாகவும் அமைந்தபோது மக்கள் யாரினது சொல்லையும் நம்பத் தயாரில்லை என்பதால் பொலீஸ் அதிகாரி ஒருவரின் எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை பெற்றுக் கொண்டதன் பிற்பாடு மக்கள் கலைந்து சென்றனர். இந்த எழுத்தாவணம் உரிய முறையில் உரிய காலப்பகுதிக்குள் இவ்வீடுகள் கிடைக்க வழியேற்படுமா? என்பதை இன்னும் 3 வாரங்களுக்குள் தெரியவரும். உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வீடுகள் சேரவேண்டும் என்பதுடன் சவுதி அரசு முஸ்லீம்களுக்காக கட்டப்பட்டதாக கூறப்படுகின்ற இவ்வீட்டுத்திட்டத்தின் முழுப்பயனும் அவர்களது எண்ணப்படி நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உணர்ந்து செயற்படுவதுடன், எதிர்வரும் தயட்டகிருள நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டாவது வீடுகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :