கவனிப்பாரற்று கிடக்கும் காணிகளை துப்பரவு செய்யவேண்டும்





(எம்.பைஷல் இஸ்மாயில் )

அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு பிரதான வீதியின் அருகிலுள்ள அதாவது (சஷா கொமினிகேஷன்) முன்பாக அமையப்பெற்ற இரு வளவுகளினால் டெங்கு நோய் பரவக் கூடிய நுளம்புகள் பெருகும் அபாயம் தோன்றக் காரணமாக அமைந்து விடலாம் என்ற அச்சம் பொதுமக்களிடத்தில் தோன்றிக் காணப்படுவதாக குறிப்பிட்ட பிரதேச குடியிருப்பாளர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

குறிப்பிட்ட பிரதேச குடியிருப்பாளர்கள் குறிப்பிட்ட வளவு உரிமையாளரிடம் இது தொடர்பாக அறிவித்தல் கொடுத்திருந்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. என்ற காரணத்தினால் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு தங்களின் கையொப்பமடங்கிய கோரிக்கையை முன் வைத்தற்கு அமைவாகவே குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரினதும், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம்.

குறிப்பிட்ட அப்பிரதேச வாசிகளின் முறைப்பாடுகள் பின்வருமாறு;

அட்டாளைச்சேனை பிரதான வீதியின் அருகில் (சஷா கொமினிகேசன்) முன்பாக அமைந்துள்ள இரு வளவுகளையும் அதன் உரிமையாளர்கள் கவனிக்காமல் இருப்பதனால் குறிப்பிட்ட வளவுகளில் இரவு நேரங்களில் ஆடு, மாடு, நாய் போன்ற கட்டாக்காளிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதனால் இரவு வேளைகளில் தூங்கும் சிறு பிள்ளைகளுக்கும், வயது போன வயோதிபர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் இந்த கட்டாக்காளிகளின் சத்தம் பெரும் தொல்லையாக அமைந்து காணப்படுகின்றது.

அது மாத்திரமல்லாமல் எஸ்.எல்.மௌலீன் என்ற நபரின் வளவில் தகரத்தினால் அமைக்கப்பட்ட கூடாரத்தினூடாக பகல், இரவு நேரங்களில் வீசுகின்ற பலத்த காற்றினால்  உண்டாகும் தகரத்தின் ஓசையால் தூக்கத்தில் இருக்கும் சிறு குழந்தைகள், நோயாளிகள் ஆகியோர்களுக்கு இத்தகரத்தின் மூலம் எழுப்படும் சத்தத்தினால் அச்சமடைந்த நிலையில் தூக்கத்தை விட்டு எழுந்து விடுகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட இரு வளவுகளில் கிடக்கும் கருங்கல் மற்றும் குப்பைகள் போன்றவைகளில் இருந்து பாம்பு, பூரான் மற்றும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவைகள் இருக்கலாம் எனவும் அல்லது பெரும் அபாயம் தோன்றலாம் எனவும் குறிப்பிட்டு காட்டி இதனால் இரவு வேளைகளில் வெளித்தேவைகளை முடிப்பதற்கும் அச்சம் கொள்கின்றனர்.

தற்போது இது மழைகாலம் என்பதனால் குறிப்பிட்ட வளவுகளில் கிடந்த கட்டாக்காளிகலின் மலம், சலம் என்பவைகள் வெள்ளத்தில் கலந்து அந்த அசுத்தங்கள் நீரில் கலந்து குடியிருப்பு நிலங்களில் பெரும் அசிங்கததை உண்டுபன்னி துர்நாற்றத்தையும் வீசுகின்றதென சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயத்தை குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் தங்களின் மேலான கவனத்திற் கொண்டு மிக கஷ்டத்துக்கு மத்தியில் சுத்தம், சுகாதாரம் மற்றும் அச்சமடைந்த  நிலைமையில் வாழுகின்ற குறிப்பிட்ட பிரதேச வாசிகளுக்கு  ஒரு விடுதலையை பெற்றுத்தரும் நோக்குடனும் சுத்தம், சுகாதாரம், அச்சமற்ற நிலைமையில் வாழ்வதற்கும் ஏற்றாப்போல் தக்க நடவடிக்கையை உரிய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று 2012.12.25 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான கடிதத்தின் பிரதிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கும், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கும் அனுப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :