தேசத்தின் மகளாக மலாலா: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Share on
தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிறுமி மலாலாவை ‘தேசத்தின் மகளாக’ பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலிபான்களு
க்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலாலா.

தற்போது பிரிட்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி, பிரிட்டன் சென்று அந்த சிறுமியை சந்தித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலாலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.

மலாலா தான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்தத் தீர்மானம் ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :