45 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாது நீண்ட காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த 45 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண குடா நாட்டில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த முன்னாள் போராளிகளிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment