அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்களினால் நடாத்தப்பட்ட ஆா்ப்பாட்டம்


(எம்.பைஷல் இஸ்மாயில்இ எம்.ஐ.முஹம்மட் றியாஸ்)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்களினால் நடாத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்தில் மக்களினால் எடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை (26) அம்மக்களினால் பாரிய ஆா்ப்பாட்டத்தை நடாத்தினா்.

கடந்த சுனாமியின் போது வீடுகளை இழந்த குடும்பத்த தலைவா்கள் அக்கரைப்பற்று நுரைச்சோலை தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இதுரை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும்
வீடுகளை வழங்குமாறு கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்ட பேரணியினையில் பொலிஸார் அதை தடுக்க முற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாருடன் முரன்பட்டு பல கருத்து மாற்றங்களும் இடம்பெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமார் 2 மணித்தியாலங்களாக அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதான வீதியினூடாக வாகனம் செல்லாமல் தடைப்பட்டிருந்தும் குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :