Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி; குவைத் தூதரகம் உறுதி



ஏயெஸ் மெளலானா-
ல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறைத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய கட்டிடத் தொகுதி ஒன்றை விரைவாக அமைத்துக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது.

ரஹ்மத் பவுண்டேஷன் தலைவரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான குவைத் தூதுவரின் பிரதிநிதியாக நேற்று இப்பாடசாலைக்கு விஜயம் செய்த குவைத் தூதரகத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மட் பிர்தெளஸ், இதற்கான உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.

பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் குவைத் தூதரக செயலாளர் வரவேற்கப்பட்டதுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் நீண்ட காலத் தேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன் அக்கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து பாடசாலை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்ட தூதரக செயலாளர்
அங்கு நிலவி வருகின்ற பல்வேறு குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிந்தார்.

இதன்போது கட்டிட வசதி குறைபாடு காரணமாக சில வகுப்பறைகள் தகரக் கொட்டில்களில் இயங்கி வருவதனால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தன்னால் அவதானிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டிய அவர், முன்னுரிமை அடிப்படையில் வகுப்பறைக் கட்டிடமொன்றை அமைத்துத் தருவதற்கு குவைத் தூதுவரின் அனுசரணையுடன் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக தூதரக செயலாளர் முஹம்மட் பிர்தெளஸ் மற்றும் ஏற்பாட்டாளரான முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் அதிபர் அலி அக்பர் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார்.






முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.