Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

 

அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் Colombo Institute of Research & Psychology (CIRP) உளவியல் டிப்ளோமா, பட்டப்படிப்பு, முதுமாணிப் பட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 300 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம் கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நேற்று 21 சனிக்கிழமை கல்விநிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி தர்சன பெரேரா தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் பம்பலப்பிட்டியில் உள்ள இந் நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்து அவுஸ்திரேலியா , இலங்கையில் உட்ப உளவியல் பேராசிரியா்களும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனா். இங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலியா பல்கலைக்கழத்தின் பேராசிரியா் தெரிவிக்கையில்
இந்த பாடம் உலகின் பிற நாடுகளில் மிகவும் பிரபல்யமாக சேவைகளை பெற முடியும். என்பது அந்த நாடுகளின் மக்கள் அதிக ஆயுட்காலம் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இத்துறைக்கு அதிக கேள்வி நிலவுவதுடன் இலங்கை மாணவர்கள் இதன் மூவம் வெளிநாடுகளில் உயா்வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும்.தமது குழந்தை வளா்ப்புக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறைகளுக்கு குழந்தைப் பாடசாலைகள் முதியோா் பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் உளவியல்துறை கற்கை அவசியமாகின்றது. ஒவ்வொரு ஆசிரியர் வாழ்க்கைத்துனைவியர் உளவியல் துறை அறிந்து இருத்தல் வேண்டும். எனவும் கருத்து தெரிவித்தா்ர்


இந் நிகழ்வில் கலாநிதி ரன்ஜித் பத்துவான்தொடுவ, உளவியல்த்துறை பாடத் தலைவா் சி.ஜ.ஆர்.பி பாடசாலை உளவியல், டிப்ளோமா, வியாபார உளவியல் டிப்ளோமா, பொது உளவியல், முதுமாணி ஆகிய பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு திரு. கிரான் சிரோனி, உயா்தர டிப்ளோமா உளவியல் முடித்தவா்களுக்கு கலாநிதி ரண்ஜித் பதுவந்தொடுவ, பேராசிரியா் அனிில் குணதிலக்க, கலாநிதி தரசனி பெரேரா ஆகியோா்கள் பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனா்.
இந் நிகழ்வில் 1000க்கும் ஆதிகமான பெற்றோா்கள், மாணவ மாணவிகள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்துறையில் கொழும்பு கண்டி பிரதேச மூவினங்களையும் சாா்ந்த ஆங்கில மொழி மூலமான மாணவிகள் 90 வீதமானவா்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.