மூத்த கிராமசேவை அதிகாரி இராஜரெத்தினம் 33வருடசேவையிலிருந்து ஓய்வு



காரைதீவு சகா-
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தவராகவும் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் 33வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்ற கண.இராஜரெத்தினத்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது..

இந்நிகழ்வானது, கிராம சேவை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி தலைமையில் பிரதேச செயலகத்தின் இடம்பெற்றது.

1988ஆண்டு முதல் கிராம சேவையாளராக இருந்து திருக்கோவில் பிரதேசத்தில் யுத்த காலம் தொடக்கும் 2009ம் ஆண்டு மீள் குடியேற்றம் மற்றும் 2004 சுனாமி 2019 தொடக்கம் 2021 வரை கொரோனா நோய்த் தாக்கம் முதலான அனர்த்த காலங்களில் பிரதேச மக்களுக்காக மிகவும் சிறப்பாக சேவையாற்றி இருந்ததோடு சேவையின் இறுதிக் காலத்தில் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தராகவும் சுமார் 33 வருடங்கள் அரச சேவையாற்றியுள்ளார்.

ஓய்வு பெற்ற கண.இராஜரெத்தினம் அவர்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பா மற்றும் நினைவுப் பரிசில்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் கணக்காளர் எம்.அரசரெத்தினம் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராசா மற்றும் கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :