சஹ்ரான் ஹாஷிமுடன் பேச்சு நடாத்திய முஸ்லீம் அரசியல்வாதிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைத்த வீடியோ

ல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சி பிரதநிதிகள் சிலர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் சஹ்ரான் ஹாசீமுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற காணொளி ஒன்று நேற்று (11) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அந்த கலந்துரையாடலில் பங்கேற்ற குறித்த அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் சாட்சியமளித்த போதே இந்த விடயம் தெரியவந்தது.

இதேவேளை, தாக்குதலுக்குப் பின்னர், ஆறு தீவிர முஸ்லிம் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு அரச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவுகளினால் அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அவற்றில் மூன்று மட்டுமே இதுவரை தடை செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவில் தெரியவந்தது.

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஓய்வுப் பெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் சிசிர மெண்டிஸ் நேற்று நான்காவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கிய போது இதனை கூறினார்.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் நாயகம் மெண்டிசிடம், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இரத்தம் சிந்திய பல தாக்குதல்களின் பின்னணியில் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அந்த அமைப்பை தடைசெய்ய வேண்டிய அவசியத்தை உணரவில்லையா? என வினவினார்.

அதற்கு பதிலளித்த அவர், ´தாக்குதலுக்கு முன்பு நான் அவ்வாறு நினைக்கவில்லை. சஹ்ரனைக் கைது செய்வதே எங்கள் முதல் நோக்கமாக இருந்தாக´ கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலா? அந்த அமைப்பை தடை செய்வதற்கான தூண்டுதலாக இருந்தது என மேலதிக சொலிசிட்டர் நாயகம் அவரிடம் வினவினார்.

அதற்கு தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ´ஆம்´ என பதிலளித்தார்.

சஹ்ரான் ஹாசீமின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு பேரவை கூட்டங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டதாகவும், ஆனால் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு திணைக்களத்தால் கைது செய்யத் தவறிவிட்டதாக அவர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

அதன் பின்னர், 2015 பொதுத் தேர்தலில் தேசிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியான (என்.எஃப்.ஜி.ஜி) சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் மொஹமட் முஸ்தபா அப்துல் ரஹ்மான் நேற்றிரவு (11) ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.

இதன் போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாசீம் உடன் சாட்சியாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் சிப்லி பாரூக் ஆகியோர் கலந்துரையாடும் காணொளியை சமர்பித்தார்.

அதில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் சிபிலி பாரூக் மற்றும் சாட்சியாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது சகோதரர் செயின் முகமது ஆகியோரின் முன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

இந்த வீடியோ காணொளி கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை படமாக்கப்பட்டிருந்தாலும் குறித்த ஒரு பகுதியை மட்டுமே ஆணைக்குழு சாட்சியின் முன் காட்சிப்படுத்தியது.

அவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் தமிழ் மொழியில் நடந்துள்ளது.

இதன் போது ஆணைக்குழுவின் சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், ´நீங்களும் சிப்லி பாரூக்கும் சஹ்ரான் ஹாசீமை ஏன் சந்தித்தீர்கள்? என வினவினர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் அப்துல் ரஹ்மான், ´ இந்த கலந்துரையாடல் சஹாரனின் அலுவலகத்தில் நடந்தாகவும் அது ஒரு அரசியல் கலந்துரையாடல் எனவும் இது 2015 பொதுத் தேர்தல் நடைபெற ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாகவும்´ பதிலளித்தார்.தெரண தமிழ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :