ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் சீரோவான முன்னாள் கி.மா.அமைச்சர் உதுமாலெப்பை!

அபு மபாஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் அண்மையில் இணைந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்கு கட்சியால் எந்த உருப்படியான எந்த பதவிகளும் வழங்கப்படாத நிலையில் கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் தலைவர் அட்டாளைச்சேனையில் நடந்த எந்த கூட்டத்திலும் உதுமாலெப்பையை உயர்த்தியோ அவருக்கு சார்பாகவோ எதுவும் பேசாத நிலையில் நேற்று ஞாயிறு சாய்ந்தமருதில் இடம்பெற்ற கூட்டத்தில் கட்சியில் உதுமாலெப்பைக்கு பின்னர் இணைந்து கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலுக்கு மாகாண அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது கடற்கரை வீதி, அப்பிள் தோட்ட வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் அவர்களது தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கூடி இருந்தனர். அங்கு சனக்கூட்டத்தை பார்த்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தனது வழமையான வாக்குறுதி பாணியில் இதனையும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த அறிவிப்பின் மூலம் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் ஆதரவாளார்கள் மத்தியில் கட்சியின் நடவடிக்கை மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளதுடன் கட்சியில் உதுமாலெப்பையின் வருகை அட்டாளைச்சேனை காங்கிரஸ் காறர்களுக்கு விருப்பமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மாறிச்சென்ற முன்னாள் கல்முனை மாநகரமுதல்வர் சிராஸ் மீராஷாஹிப் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் மீண்டும் முஸ்லீம் காங்கிரசில் இணைந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :