ஞானசாரவுக்காக சாய்ந்தமருது மகன்!




ஞானசார தேரருக்கு ஆதரவாக கொழும்பில் சாய்ந்தமருதுாா் பிறப்பிடம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் Air craft Mechanical Eng. அமீர் இஸ்ஸடீன் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் இவா் கொரோனவுக்கு முன் இலங்கை வந்தவா் மீண்டும் அவுஸ்திரேலியா செல்லவில்லை.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்ல இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தே இவா் சிலருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் கொழும்பு - இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக அமைதியான முறையில் நடந்தது.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிஸ்னுலாபி அமீர் இஸ்ஸதீன், எங்கள் மக்கள் கட்சி ஊடாக கம்பஹா மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஞானசார தேரர் தலைமையிலான கட்சிக்கு 65000க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அக்கட்சிக்கு ஒரேயொரு ஆசனம் தேசியப்பட்டியல் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு பலர் இடையூறு செய்கின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு அவருக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :