கல்முனை தமிழ் பிரதேச செயலகம் பெறுவதற்கு முக்கிய தடையாக இருந்தவர் கோடீஸ்வரன்.


மத்தியமுகாமில் முன்னாள் த.அ.கட்சிமூத்தஉறுப்பினர் ஏகாம்பரம் சாடல்.

காரைதீவு நிருபர் சகா-
ல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தைப் பெற எத்தனையோ சந்தர்ப்பங்கள் கனிந்துவந்தன. எதனையுமே த.தே.கூட்டமைப்பு பயன்படுத்தவில்லை. அத்தனைக்கும் தடையாகஇருந்தவர் கோடீஸ்வரனே.

இவ்வாறு தமிழர்ஜக்கிய சுதந்திரமுன்னணியின் தலைவரும் திகாமடுல்ல கப்பல்சின்ன தலைமை வேட்பாளருமான கருணாஅம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து 11ஆம் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல்பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்தஉறுப்பினர் எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம்(வயது87) குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில்:

14உறுப்பினர்களுடன் ரணிலுக்கு முட்டுக்கொடுத்த இவர்களால் ஆக 5பேருடனிருந்த றிசாட் முன்னிலையில் ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டது.
அதாவது 14 ஜிஎஸ். பிரிவுகளை மட்டுமே கொண்டிருந்த கோறளைப்பற்றை மேற்கு மத்தி என வெறும் 8பிரிவுகளுடன் அமீரலியால் பிரிக்கமுடிந்தது. ஆனால் 14உறுப்பினர்களுடனிருந்த இந்த த.அ.கட்சியினால் 29ஜிஎஸ் பிரிவுகளைக்கொண்ட கல்முனை தமிழ்பிரதேசசெயலகப்பிரிவை உருவாக்கமுடியாமல் போய்விட்டது?
கேட்டால் கல்முனை தமிழ்ப்பிரிவைபற்றிய விழிப்புணர்வு ஊட்டியது அவர்தானாம். எமக்கு எல்லாம் தெரியும் இதனைபெறவைக்காமல் தடுத்தவரே கோடீஸ்வரன்தான்.ரெலோவிலிருந்து கட்சிமாறிய இவரால் இதுவரை அம்பாறைத்தமிழ் மக்களுக்க என்ன செய்யமுடிந்தது?

இதே தமிழரசுக்கட்சி காலத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலஅபகரிப்பு சூறையாடல் வன்முறைகள். இதனை வெறுமனே கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்றும் அவர்கள் நட்பு பாராட்டுகிறார்கள். உள்ளுராட்சிசபையிலும் இவ்வாறு நட்பு பாராட்டினார்கள்.

கேட்டால் நாங்கள் புட்டும் தேங்காய்ப்பூவும் போலுள்ளவர்கள். இவைகளையிட்டு கண்டும்காணமலிருப்போம் என்பார்கள். இது நீடித்தால்
இன்னும் 2வருடகாலத்தில் தேங்காய்ப்பூ மட்டுமே மிஞ்சும். புட்டைக்காணமுடியாது.
கடந்த உள்ளுராட்சிமன்றதேர்தலில் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பேசும்போது றிசாட்டுக்கு ஏசுமாப்போல் இப்படி ஏசுகிறார்.
அறிவுஞானம் முற்றிய வெள்ளையானைகள் 11கோவேறு கழுதைகளை கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பியுள்ளன. அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் பேய்க்காட்டியுள்ளது.
இந்த லட்சணத்துள் வடக்கு கிழக்கு இணைப்பா?
மலட்டுக்கிழவி பெரியபுள்ளயாகி கல்யாணம்பிடித்து பிள்ளையைப் பெற்றாள் என்றால் நம்பலாம் ஆனால் வடக்கு கிழக்கு இணையும் என்றால் நம்பலாமா? முடியாது. என்றார்.

கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் கேள்வி;
கூட்டத்தில் உரையாற்றிய த.ஜ.சு.முன்னணி ஆதரவாளரும் கல்முனையின் பிரபல வர்த்தகருமான கி.லிங்கேஸ்வரன் கூறுகையில்:

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா செயலாளர் துரைராஜசிங்கம்.இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரதித்தலைவர் யாரென்று தெரியுமா? அவர்தான் முகமட் இமாம் இல.34 நூராணியாவீதி கொழும்பு12. பிறகெப்படி இவர்கள் தமிழ்மக்களைக் காப்பாற்றுவார்கள்?

கிழக்கு மாகாணசபை தாரைவார்ப்புக்கும் கல்முனை தமிழ்பிரதேசசெயலகத்தடைக்கும் இதுவே காரணம். இது விளங்காமல் இன்னும் சிலதமிழ்மக்கள் இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அல்வாதான் எனவும் அவர் தெரிவித்தார்.

அங்கு லிங்கேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்:

விரும்பியோ விரும்பாமலோ இன்னும் 20வருடங்களுக்கு மஹிந்தவின் ஆட்சிதான இலங்கையில் இருக்கப்போகிறது. இக்காலகட்டத்தில் எதிர்க்கட்சி அரசியல் நடாத்தி டம்மிபீஸ் ஆகவேண்டுமா?
கிழக்கில் மாதமொன்றுக்கு 20பேர் மதம் மாறுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 38கிராமங்கள் பறிபோயுள்ளன. முனன்முதலில் 1958இல் எனது தாயார் வாழ்ந்த மீனோடைக்கட்டுக்கிராமம் பறிக்கப்பட்டது.அன்று எந்த இயக்கமும் இல்லை ஆயுதமும் இல்லை. இதனை யார் செய்தார்கள் என்பதை உலகறியும்.
1960இல் உட்துறை அமைச்சாக டட்லி இருந்தார். மசூர்மௌலானாவை கல்முனையில் வீட்டுச்சின்னத்தில் இ.த.அ.கட்சியில் போட்டியிட முனைந்தார்கள்.அது நிராகரிக்கப்பட அகமட் முன்வந்தார். வெற்றியீட்டினார். நடந்தது என்ன?
1968இல் கரைவாகுப்பற்று பகுதியில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டனர்.
அன்றிருந்த கல்முனை அரச தமிழ்க்கலவன் பாடசாலை இன்று சாஹிறாக்கல்லூரி. அன்றிருந்த கல்முனை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை இன்று மஹ்முத்மகளிர் கல்லூரி அன்று காளிகோவில் இருந்த இடத்தில் இன்று பூட்சிற்றிஉள்ளது. அன்று ஜயனா கோவில் இருந்த இடத்தில் இன்று பள்ளிவாசல். அதேபோல் பிள்ளையார் கோவில் இருந்த இடத்திலும் பள்ளிவாசல்.
கிழக்கு மாகாணசபையில்தான் இந்த இணக்கத்தை விரும்பியவர்கள் இணைப்பதற்கான நல்லிணக்கத்தைப் பெற்றிருக்கவேண்டும்.

தாயைக் கற்பழித்துக்கொன்றவனை அழைத்துவந்து சொந்த வீட்டில் குளிருட்டப்பட்டஅறையில் தன் சொந்தமனைவியுடன் தாம்பத்திய உறவுக்கு அனுப்பிவிட்டு கைகட்டிநின்ற ஆண்மகள் போலத்தான் இந்த தமிழரசுக்கட்சியினர் இருந்தனர்.
வீடு 2015இல் அடகு வைக்கப்பட்டு அறுதியாகி இன்று காலாவதியாகிவிட்டது. வீட்டின் கோப்பிசத்தை ஹக்கீம் கண்டிக்குக்கொண்டுபோய்விட்டார்.
கதவுநிலைகளை யன்னல்களை ஹிஸ்புல்லா காத்தான்குடிக்கு கோண்டுபோய்விட்டார். வளைக்கட்டிகளை ஹரீஸ் கல்முனைக்குகொண்டுசென்றார். அத்திவாரத்தை அமீரலி ஏறாவூருக்கு கொண்டுபோய்விட்டார்.அதாவது இன்று வீடு என்றொரு சாமான் இல்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -