இஸ்லாமியப் பெண்ணாக வாழமுடியவில்லையே என்று தன் உயிரை மாய்த்த யுவதி.-கண்ணீர் கதை




ஏறாவூர் நஸீர்-

ஸ்லாமியப் பெண்ணாக வாழமுடியவில்லையே என்று தன் உயிரை மாய்த்த யுவதி.

யாரென்று புரிகிறதா? அன்பின் தமிழ் முஸ்லீம் உறவுகளே,

மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி, அந்தோனியார் வீதியில் வாழ்ந்த கிருஷ்ன குமார் கௌரிதேவி என்ற 19 வயது யுவதியின் நேற்றைய மரணம் உண்மையில் பாரிய மனவேதனையை அளித்தது.

இந்த யுவதி மரணத்திற்கு முன்னர் கடிதமொன்றில் எழுதிவைத்த வாக்குமூலம் உண்மையில் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது.

இந்த யுவதிதான் சென்றவருடம் ஜனவரியில் 18 வயதை அடைந்ததும், இஸ்லாத்தை கற்றுக்கொள்ள காத்தான்குடியில் அடைக்களம் புகுந்தவர்.

தனது பெற்றோருக்கு நான்கு பக்க கடிதம் மூலம், தனது நிலைப்பாட்டை தெரிவித்து என்னைத் தேடவேண்டாமென்று வீட்டிலிருந்து வெளியாகி காத்தான்குடி மத்ரசாவில் இஸ்லாமிய கற்கையை கற்க ஆர்வம் கொண்டிருந்தவர்.

ஆனாலும் ஒருசில இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் விடயத்தை வேறுவிதமாக கொண்டுசென்று கௌரிதேவியின் பெற்றோரை முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களையும்,அந்த யுவதி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த முஸ்லீம் ஆசிரியர்களுக்கு எதிரான கருத்துக்களையும் சொல்லுமாறு திணித்ததன் விளைவால் மாவட்ட தமிழ் முஸ்லீம் உறவே இதனால் சீர்குலைந்துவிடுமென்ற நிலையை தோற்றுவித்திருந்தனர்.

இந்த நிலையில் காத்தான்குடி பொலிஸில் #நான் #ஏன் #வெளியேறினேன் என்று முறைப்பாடு செய்திருந்தும்,
பொய்யான குற்றச்சாட்டுக்களை முஸ்லீம்கள் மீதும் இஸ்லாத்தை கற்க வந்த யுவதி மீதும் இனவாதிகள் முன்னெடுத்து பொலிஸிலும். வைத்தியசாலையிலும், நீதிமன்றத்திலுமாக அந்த யுவதியை அலைய வைத்து, யாருமே எதிர்பாராத விதமாக 2019 ஜனவரி வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆதினத்தில்,
18 வயது நிரம்பிய யுவதியை சட்டம் பெற்றொரிடம் கையளித்தது.

சரி. யுவதியை மீட்டுவிட்டோம் என்று வீறாப்பு பேசிய இனவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரையான 15 மாத கால இடைவெளிக்குள் ஒருதடவையாவது அந்த யுவதியின் வீட்டுக்கு சென்று அவர்களது அடிப்படைத் தேவைகளையாவது செய்து கொடுக் முயற்சித்தார்களா? என்றால் இல்லையென்றே மௌனம் பதில் அளித்தது.

நான் இஸ்லாமியப் பெண்ணாக வாழவேண்டும், எனது பெயர் பாத்திமா றிஹானா என்று வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட மங்கைக்கு, தான் நினைத்த வாழ்க்கையை வாழமுடியவில்லையே என்று பூச்சிநாசினியை உட்கொண்டு நேற்றுக் காலை (18/03) மரணித்துவிட்டார்.

அந்த யுவதியின் மரண வாக்குமூலத்தை வாசிக்கும்போது நெஞ்சு வெடிக்கப்பார்க்கிறது.
யாஅல்லாஹ்! நீயே யாவும் அறிந்தவன்.!

அந்த யுவதியின் கடிதத்தில்,

*******************************
***********
#அன்புள்ள #உள்ளங்களுக்கு
நான் வளர்ந்தாலும் எனது பழக்கவழக்கம் மாறவில்லை .வளரவில்லை.
நான் மனதளவில் சிறுபிள்ளை .
எனது வாழ்க்கையில் நான் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கவில்லை .
#இஸ்லாம் #என்றால் #என் #உயிர் .
அதைப் பறித்து விட்டீர்கள்.
எல்லாவற்றையும் நினைத்து நினைத்து என்னால் முடியவில்லை.
இன்னும் இருந்தாள் எனக்கு பைத்தியம் பிடித்து விடும் .SO நான் போகின்றேன்.

எனது பையில் நிறைய பொருட்கள் உள்ளன. அவற்றை என்னுடன் புதையுங்கள் .Pls காலைப்பிடித்து கேட்டுக்கொள்கிறேன் .
நான் பாவித்த எதையும் பாவிக்காதீர்கள்.
என் Laptop என்னுடன் தாருங்கள்.
என்னுடைய புத்தகங்கள் , என்னுடைய கிளி குஞ்சுகள் கவனம்.
எனது தலையணை I Mean pillow எனது உடைகள் எல்லாவற்றையும் தாருங்கள்.
#என்னை #வணங்க #வேண்டாம் .
நான் போகிறேன்.
நான் அழுதாலும் எல்லோரும் சிரிக்க வேண்டும்.
இதுவே எனது கனவு .
எனக்கு யார் மீதும் கோபம் இல்லை எனக்கு கோபிக்க தெரியாது.
#நான் #மனதார #ஒரு #முஸ்லிமாய் #வாழ்ந்தேன்
finished my Life in 20 years.

******************************************


என்று எழுதப்பட்டிருந்தது.

மன ஆறுதலுக்காக மூன்று பச்சைக்கிளிகளை வளர்த்துவந்த இந்த யுவதியின் நெஞ்சிலேயே கிளிகள் படுத்துறங்குமாம்.
நேற்றுக்காலை(18/03) 08.00 மணியளவில் வழமைக்கு மாறாக கிளிகளின் சத்தம் கேட்டதால், தந்தை மகளை சத்தமிட்டு அழைத்தபோதும் எழுந்துவராததால்,

மகளை எழுப்புமாறு தாயிடம் சொல்லிவிட்டு அருகாமையில் இருந்த தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்ற சென்றிருக்கிறார்.

அதே கணம் மகளை எழுந்திருக்க சொல்ல சென்ற தாய்தான் மகள் கௌரிதேவி மரணித்திருப்பதை கண்டு அழுது புலம்பியுள்ளார்.

அழுகை சத்தம் கேட்டு வந்த அயலவர்கள்தான், கௌரிதேவிக்கு அருகில் நஞ்சு போத்தல் இருப்பதையும், கடிதமொன்று இருப்பதையும் கண்டுள்ளனர்...

பிரேத பரிசோதனையை தொடர்ந்து இன்று (19/03) பிரேதம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இஸ்லாமிய வாழ்க்கைக்குள் செல்லப்போவதை தடுக்க வந்த கூட்டம், இவ் ஏழைக்குடும்பத்தின் பிரேதத்தை கொண்டு செல்ல (பெற்றோரைத்தவிர )வரவில்லையே??!!

இனிமேலாவது அந்த ஏழைக்குடும்பம் நிம்மதிப்பெருமூச்சுடன் நீட்டி நிமிர்ந்து படுப்பதற்கு ஒரு வீட்டையாவது கட்டிக்கொடுப்பார்களா??

தனது 14 வயது வரை தான் சார்ந்த இந்துமதத்தோடு இருந்த மாணவி கௌரிதேவி. 18 வயதையடையும் வரைக்கும்
நான்கு வருடங்களாக இம் மாணவியின் நடத்தையில் இஸ்லாம் மதம் சார்ந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதை பெற்றோர் கண்டும் காணாமலே இருந்து வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான் இம் மாணவியின் மனதில் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றியுள்ளது.

முதலில் நெற்றியில் பொட்டு வைப்பதை நிறுத்தியுள்ளார்.

அது மாத்திரமின்றி பாடசாலைக்கு சீருடையில் செல்லும்போது முழங்கால் தெரியாதளவு ஆடை அணிவதோடு, தனியார் வகுப்புகளுக்கு செல்லும் போது டவுசர் அணிந்தே சென்றிருக்கிறார்.

இவை அத்தனையும் இம் மாணவியின் செயற்பாட்டில் நடந்தேறிய வேளை கண்டிக்காத பெற்றோரும், மற்றோரும் தன் படிமுறை வளர்ச்சியில் 18 வயதை அடையும் வரை காத்திருந்து "இஸ்லாத்தை படிக்க வீட்டைவிட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் " என பெற்றோருக்கு சுயமாக நான்கு பக்க கடிதம் எழுதிவைத்து விட்டு 2019 ஜனவரியில் வெளியேறியதை மறைத்து,

அம் மாணவி கல்விகற்ற பாடசாலையில் கற்பித்த இஸ்லாமிய ஆசிரிய ஆசிரியைகள் மீது வீண் பழி சுமத்தி,

இம் மாணவியின்
உளத்தூய்மையை கொச்சைப்படுத்தி,

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அம் மாணவியின் பெற்றோர்,
பிள்ளை விரும்புகின்ற மதத்தை பின்பற்ற சம்மதம் தெரிவித்திருந்தும், அதனை முறியடிக்க ஓரிரு இனவாதிகள் முன்னின்று செயற்பட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் கேவலமாக இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தி எழுதியதால் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன?

கௌரிதேவியை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -