மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டுச் சின்னத்தில் களமிறங்குகிறார் முன்னாள் முதலமைச்சர்- ஹாபிஸ் நஸீர்.

அபு மபாஸ்-

லங்கையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு சிறந்த படிப்பினையையும் புரிந்துணர்வையும் காட்டி உள்ளதுடன் பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து செல்வதன் கட்டாயத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரையில் அல்லது இராங்க, பிரதி அமைச்சுக்களிலும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பிடிக்காத நிலைமையானது முஸ்லீம் சமூகத்தின் அபிவிருத்தியில் மற்றும் சமூகத்தின் இருப்புக்களில் பெரும் கேள்வியை உண்டு பண்ணியுள்ளமையை யாரும் மறுக்க முடியாது.

பொதுஜன பெரமுன என்னும் கட்சி ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் கட்சியாகப் பேசிக்கொண்டாலும் இன்று பெரும்பான்மை மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிகமான விசக்கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு காரணம் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் என்பதில் சற்றேனும் பிழைகாண முடியாது.

கடந்த தேர்தல் காலங்களில் மேடைகளில் மிக மோசமான நச்சுக்கருத்துக்கள் இனவாதக் கருத்துக்களை அதிகம் பாவித்தமையை நாம் கேட்டும் கண்டும் அமைதியாக இருக்க முடியாது. பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள பேரினத்தவர்கள் எப்படித்தான் இனவாதம் பேசினாலும் அவர்களின் பேச்சுக்கு நியாயமான கருத்துக்களை வழங்குவதன் மூலம் எதுவும் அறியாத பெரும்பான்மை மக்கள் சிறந்த கருத்துக்களை கேட்டு தங்களது மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால் நம்மவர்கள் மேடைகளில் ஒலிவாங்கியைக் கண்டதும் தன் வாயில் இருந்து என்ன வார்த்த வருகிறது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் கொண்டு வந்த ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூக்குரலிட்டால் சிறுபான்மை மக்கள் மாத்திரம் வாக்களித்தால் ஜனாதிபதி வந்துவிட முடியுமா..? அவர் பெரும்பான்மை வேட்பாளர்தான் ஆனால் வெற்றி பெற 80 வீதமாக இருக்கும் பெரும்பாண்மை மக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த நிலமையினை நம் சமூகத்தலைவர்களின் பேச்சுக்களும் தடுத்திருக்கின்றமையை நாம் மறுக்க முடியாது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரம் சிறந்த முறையில் வழங்கப்படவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இதுவரை கிழக்கு மாகாண மக்களின் அதிக வாக்குகளினாலும் அதிக உறுப்பினர்களினாலுமே பேரும் புகழுடனும் ஓங்கிக் கொண்டிருப்பது நாம் அறிந்த விடயம். ஆனால் இத்தனைக்கும் கிழக்கு மாகாணத்துக்கு சிறந்த பதவிகளோ அதிகாரங்களோ கட்சி வழங்கவில்லை என்பது கவலையான விடயம்.

அதுபோல் கிழக்கின் அபிவிருத்தியில் முஸ்லீம் கட்சிகளின் வகிபாகம் மிகவும் பின்னிலையில் நிற்பதும் நாம் அறிந்த விடயமாகவே இருக்கின்றன. இந்த நிலமையினை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தொழிலதிபருமான ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்‌ஷவுடன் நெருங்கிப் பழகியவர் மட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருந்தவர்.

எனவே பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சி இன்னும் 10 தொடக்கம் 15 வருடங்களுக்கு நீடிக்கும் சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ள இந்த நிலையில் குறித்த இந்த கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் ஹாபிஸ் நசீர் விருப்பம் கொண்டு மட்டு மாவட்டத்தில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் ஆகீயோர் இணைந்து தேர்தல் கேட்கும் பட்சத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருப்பது மட்டுமல்லாது ஒருவர் தோல்வி கண்டாலும் தேசியப்பட்டியல் மூலம் பாரளுமன்றம் செல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அதன் காரணமாக ஹாபிஸ் நசீர் மொட்டுவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் களம் அமைப்பது காலத்தின் தேவை. எனவே அவர் அதில் இணைந்தே பயணிக்க உள்ளதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -