Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message
Headlines
Loading...
Admin-message

நாட்டை சரியான முறையில் பாதுகாக்கும் தலைவன் வேண்டும் - தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா

எம்.என்.எம்.அப்ராஸ்-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து கல்முனையில் நேற்று இரவு (03) தேசிய காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தலைமையில் தேர்தல் பிரச்சாரமொன்று இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுள்ளா உரையாற்றுகையில் மேற்கண்டாவாறு தெரிவித்தார் .

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

இந்த நாடு உருவாகிய காலத்திலிருந்து சிங்கள அரசர்களுக்கு வெளிநாட்டு படையெடுப்பின் போது நமது நாட்டை பாதுகாக்கப்பதற்க்கு எப்போதும் விசுவாசமாகவும் நாட்டின் ஆரம்பம் தொடக்கம் பொருளாதாரதரம் ,வைத்தியத்துறை போன்றவற்றை கட்டியேழுப்பியவர்கள்
முஸ்லிம்களே நாட்டை பாதுகாக்கும் போரட்டத்திலே முஸ்லிம்கள் எப்போதும் நாங்கள் ஒன்றாகவே இருந்துள்ளோம் இப்போராட்டத்தில் நாமும் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களும் இந்த நாட்டுக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளோம்.
இந்த சூழ்நிலையில் எதிர் வருக்கினற ஜனாதிபதி தேர்தலில் பிரதான எமது கோரிக்கையாக எமது நாட்டை பாதுகாக்கும் நாட்டிக்குள் வெளிசக்திகள் ஊடுருவல் வருவதை தடுக்கும் நாட்டுக்கு ஓர் முதுகெலும்புள்ள தலைவன் வேண்டுமென்பதே .
ஒரு போதும் தேசிய காங்கிரஸ் மக்களை பிழையாக வழி நடாத்தவில்லை எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அஷ்ரப் இருந்திருந்தால் எவ்வாறு தனது நாட்டிற்காகவும் சமுகத்திற்காகவும் எவ்வாறு சேவை செய்தாரோ அப்படித்தான் நாங்கள் செய்தோம்.
ஆனால் உங்களுடைய மண்ணில் எங்களுடைய மண்ணாக இதனை உங்களுடன் சேர்ந்து ரசித்து செய்ய இந்த அரசியல் விட்டு வைக்கவில்லை .
எல்லாவற்றிக்கு இனவாதம் பிரதேசவாதத்தை உருவாக்கி பாரம்பரிய எமது உறவுகளுக்கு துரமாக்கினர் . நாங்கள் கல்முனை மண்ணுக்கு அநியாயம் செய்வர்கள் அல்ல இது எமது மண் கல்முனை மண்ணின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காய் இந்த உள்ளுராட்சி பிரிப்பு விடயத்தில் நான் கவனமாக இருக்கிறேன் . பின்னர் இவ் விடயத்தில் சிலர்
இனவாத்தை உருவாக்கினர்.
எவ்வாறு கல்முனை நகரை எவ்வாறு அழகு படுத்த வேண்டும் பற்றி தேசிய காங்கிரசின் தலைமைக்கு திட்டம் இருந்தது . மேலும் எல்லாவற்றிக்கும் முதலாவது இடம் நாட்டின் பாதுகாப்புக்கு இடம் கொடுக்கவேண்டும் இதனை சரியாக செய்யக்கூடியவர் தான் கோட்டாபய ராஜபக்ச இவரை ஆதரித்து இவரின் வெற்றியில் நாமும் இணைவோம் என்றார்.
இதன் போது தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, மேலதிக தேசிய அமைப்பாளர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா , அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்
தேசிய கொள்கை பரப்பு இணைப்பாளர் நூருல் ஹுதா உமர்,சட்ட மற்றும் கொள்கை அமுலாக்கல் பிரிவின் செயலாளர் சட்டத்தரணி ஏ .எல் .எம். ரிபாஸ், மத விவகார செயலாளர் மெளலபி சபா முஹம்மத் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.