இந்திய வர்த்தக கூட்டுறவு கண்காட்சி புதுடெல்லியில் ஆரம்பம்


முகம்மட் ரிஷாத்-

ந்திய கூட்டுறவு சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்மாதம் 11, 12, 13 ஆம் திகதிகளில் புதுடெல்லியில் இடம் பெறவுள்ளது. மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கூட்டுறவுத்துறை சார்ந்த நிபுணர்களின் பல்வேறு தலைப்புக்களிலான கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளனர். 

இந்த மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதிகளாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக மற்றும் ஆசிய பசுபிக் பிராந்திய விவசாய கூட்டுறவு அபிவிருத்தி வலையமைப்பின் உப தலைவரும் , இலங்கை இளைஞர் வலுவூட்டல் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவருமான எம்.எஸ்.முஹம்மது றியாஸூம் கலந்து கொள்கின்றனர்.

" கூட்டுறவின் ஊடாக இளைஞர் மற்றும் பெண்கள் வலுவூட்டல்" என்ற கருப்பொருளிலேயே முஹம்மது றியாஸ் எதிர்வரும் 11 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -