கல்முனையில் தாக்கப்பட்ட முஸ்லீம் வர்த்தகர் -மூவர் கைது

முஸ்லிம் வர்தகர் ஒருவர் கல்முனைப் பகுதியில் ஒரு சில தமிழ் காடையர்களினால் இன்று  தாக்குதலுக்குள்ளாகி உள்ளார்.

கல்முனை நகரில் இருந்து நோன்பு திறப்பதற்கான ஆகாரங்களை வாங்கிக் கொண்டு தமிழ் பகுதியூடாக வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் போது யானைக் கோயில் சந்தியில் வைத்து முற்றுகையிட்ட சில தமிழ் காடையர்களினாலேயே இம்முஸ்லிம் வர்தகர் தாக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியவர்களை பிடித்து பொலிஸில் ஒப்படைக்க முயற்ச்சி செய்த போது அங்கு பதற்ற நிலையேற்பட்டது.

இதைத் தொடர்ந்து ஸ்தலத்துக்கு விரைந்த பாதுகாப்பு தரப்பினரால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன்
குறித்த காடைத்தனத்தில் ஈடுபட்டோர்  சார்பாக சில தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களும் கோயில் நிர்வாகிகளும் மன்னிப்பு கோரினர்.

 அதன் பின்னர் இராணுவத்தின் முன்னிலையில் இரு சமூக பிரதிநிதிகளும் சகவாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காமல் அமைதி காக்குமாறு இருபக்க  இளைஞர்களையும் வேண்டியதுடன் வீதிகளில் கூடி நின்று பதட்டமான சூழ்நிலையை உருவாக்காமல் கலைந்து செல்லுமாறு வேண்டிக்கொண்டனர்.

அத்துடன் பிரச்சனைக்குக் காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அப்ஷர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -