அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா சந்திரிகாவிடம் மன்னிப்பு கோர வேண்டும்- சல்மா ஹம்சா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ணடார நாயக்க குமாரதுங்க தொடர்பில் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது மிகவும் கவலையளிக்கின்றனது என காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அiமைப்பின் தலைவியுமான திருமதி ஸல்மா ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டு அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே என்பார்கள். பெண்களை தரக்குறைவாக பேசுவது பெண்களை அசிங்கியமான வார்த்தைகளை கொண்டு பேசுவது ஒரு ஒழுக்கமில்லாத நாகரீகமற்ற நடவடிக்கையாகும்.

அதிலும் குறிப்பாக இலங்கையில் 12 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து இந்த நாட்டை வழிநடாத்தி கொடூர யுத்தத்தினால் இந்த நாட்டு;க்காக தனது கண்ணையும் இழந்த இலங்கையின் உயர்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா பண்ணடார நாயக்க குமாரதுங்கவுக்கு இவ்வாறு கருத்து வெளியிடுவதானது மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றது.

சந்திரிகா அல்ல வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது.

பெண்களின் மீதான வல்லுறுவு என்பது உடலினால் மேற் கொள்ளப்படும் வல்லுறவு மாத்திரமல்ல இவ்வாறான வார்த்தை பிரயோகங்களும் வல்லுறவுக்குள் அடங்கும் என்றே நான் கருதுகின்றேன்.

அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று மனித நேயம் கொண்ட நாகரீகமுள்ள பண்பாடுள்ள யாரும் சந்திகரிகா மீதோ அல்லது வேறு எந்த பெண்களின் மீதோ இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களை மேற் கொள்ளமாட்டார்கள்.

தனது தாய்க்கு அல்லது தனது சகோதரிகளுக்கு அல்லது தனது மனைவிக்கு யாராவது இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களை கூறினால் மன நிலை எவ்வாறு இருக்கும் என்பதை ஒரு முறை நினைத்துப்பார்க்க வேண்டும்.

இந் நிலையில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா சந்திரிகாவை பற்றி கூறிய மிக மோசமான அந்த வார்த்தைகளை ஊடகங்கள் மூலமாக பார்த்ததையடுத்து மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் ஒரு பெண் என்ற வகையிலும் பெண்களுக்கான செயற்பாட்டாளர் என்ற வகையில் அவர் கூறிய அந்த வார்த்தைகளையிட்டு கவலை கொள்வதுடன் இதற்காக எனது கண்டனத்தையும தெரிவித்துக் கொள்வதுடன் அந்த வார்த்தையை பிரயோகித்தற்காக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா சந்திரிகாவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -