மக்காவில் உள்ள ஸம்ஸம் கிணற்றின் ஆழம்

Share on
சுவையிலும் குணத்திலும் என்றும் மாறாத த்ண்ணீரைக் கொண்ட அக்கிணறு 98 அடி ஆழமுள்ளதாகவும் 3 அடி 7" லிருந்து 8 அடி 9" வரை அகலமுள்ளதாகவும் இருக்கிறது.

ஒரு நொடிக்கு பதினொன்றிலிருந்து 18 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 660 லிட்டரும் ஒரு நாளைக்கு 950,000 லிட்டரும் கிடைக்கும் கிடைத்துக் கொண்டேயிருக்கும் ஒரே கிணறும் ஸம்ஸம் கிணறு மட்டும்தான். அது மட்டுமல்ல,
புனிதப்பயணத்திற்கு வருபவர்கள் தானும் குடித்து ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்குத் திரும்பிச்செல்லுகையில் குறைந்தது 10 லிட்டராவது எடுத்துச்செல்லும் அதிசயமும் நடைபெறுகிறது.


பொதுவாக எந்த இடத்திலும் தண்ணீர் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பாசி படிவது இயற்கையானதே. ஆனால் ஸம்ஸம் கிணற்றில் பாசியோ பாக்டீரியாவோ உருவாகவேயில்லை. சுத்தமான குடிதண்ணீராக விளங்கும் இக்கிணற்றின் தண்ணீர் பலவித சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. கால்ஷியமும் மக்னீஷியமும் அபரிமிதமாக இருக்கும் ஸம்ஸம் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவல்லதாகவும் பலநாட்களுக்கு பசி தீர்க்கவல்லதாகவும் இறை நாடினால் நோய் தீர்க்க வல்லதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :