ஹாஷிம் உமர் பௌண்டேசன் முன்னெடுத்து வரும் இந்த சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை எளிதாக்கும் நோக்கில் இலவச மடி கணனிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் தொகுதியில் ஏற்கனவே இருபது கட்டங்களாக மொத்தம் 100 மடி கணனிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக சுதர்மன் ரதலியகொட கலந்து கொண்டார். அவர் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் செய்திப் பிரிவு பிரதிப் பொது முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்.
விசேட விசேட அதிதிகளாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் செய்திப்பிரிவின் பிரதான பொறுப்பாளர் சி.பி.எம்.சியாம், எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா,சிலோன் ஹபீபீ ஸ்தாபகர் ஹபீபீ, சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,தயாரிப்பாளர் எம்.எச்.எப். ரின்ஸா, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,அர்ஹம் சுலைமான் மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நயோமி அமரசிங்க-வெலிப்பன்ன, எம்.ஆர்.எப். ரிஸ்கா-பாணந்துறை, எம்.இஸட். ஹாஜரா-தர்ஹா டவுன் மற்றும் எம்.ரி.எப். ரஷீதா-அநுராதபுரம் ஆகிய மாணவர்கள் மடி கணனிகளைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் போது அதிதிகளுக்கு Pyramid Wilmar நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சிறப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு கல்வி துறையில் தொழில்நுட்ப அணுகலை விரிவுபடுத்தும் முயற்சியாகவும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் அமைந்ததுடன், சமூகப் பொறுப்புணர்வை முன்னிறுத்தும் சிறந்த முன்மாதிரித் திட்டமாகவும் பாராட்டப்பட்டது.















0 comments :
Post a Comment