உலக உயர் குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு கல்முனை பொது சந்தையில் பரிசோதனை ...!


எம்.என்.எம்.அப்ராஸ்-

லக உயர் குருதி அழுத்த தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.பி .ஜாமல்தீன் உடப்பட சங்கத்தின் உறுப்பினர்களின் உதவியுடன் பொது சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உயர் இரத்த அழுத்த பரிசோதனை முகாம் இன்று (17)இடம் பெற்றது.


இதன் போது கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன்,கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி என்.ரமேஷ்,கல்முனை தெற்கு மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின்,கல்முனை வடக்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி பே. கேதுஜன்,மேற்ப்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான ஜே.எம்.நிஜாமுதீன்,ஜே.எம். நிஸ்தார் பொது சுகாதார பரிசோதகர்களான எம். ஜூனைதீன், கே.எல்.மன்சூர்,எஸ்.ஜோகநாதன்,ஆர்.எம்.முஹ்சீன் ஆகியோர் மேற் குறித்த உயர் குருதி அழுத்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :