துருக்கியில் சர்வதேச ஊடகப் பயிற்சி: SLMMF உறுப்பினர்கள் 10 பேர் பங்கேற்பு



லங்கையின் ஊடகத்துறையில் புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) உறுப்பினர்கள் 10 பேரைக் கொண்ட ஊடகவியலாளர் குழு, ஒரு வார கால சிறப்பு ஊடகப் பயிற்சி நெறியில் பங்கேற்க துருக்கி நோக்கிப் பயணித்துள்ளது.

இந்தக் குழுவினர் 2026 ஏப்ரல் 19ஆம் திகதி புறப்பட்டு, துருக்கியின் அங்காரா நகரில் ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறும் “Sri Lankan New Generation Journalism Training Program” எனப்படும் பயிற்சித் திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையமான TİKA-வின் அனுசரணையில், சர்வதேச செய்தி நிறுவனமான TRT World மூலம் இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேகமாக மாற்றமடைந்து வரும் ஊடக உலகின் புதிய போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இவ்வாய்ப்பு, SLMMF அமைப்பின் ஸ்தாபகப் போஷகர் என்.எம். அமீன் மற்றும் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஆகியோரின் முயற்சியின் பலனாக கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இலங்கைக்கான துருக்கித் தூதுவர் Semih Lütfü Turgut அவர்களின் ஒத்துழைப்பில் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணத்திற்கு முன் குழுவினரைச் சந்தித்த தூதுவர், அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இத்திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்ட SLMMF தலைவர் எம்.பி.எம். பைறூஸ், உறுப்பினர்களிடமிருந்து திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களே இந்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய துருக்கித் தூதுவருக்கும், முழுமையான ஆதரவை வழங்கிய TİKA நிறுவனத்திற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சர்வதேச அனுபவங்களையும் பயிற்சிகளையும் தனது உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலம், சமகால ஊடகத் துறையின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில் SLMMF தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :