இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!



வி.ரி.சகாதேவராஜா-

லங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான் ராமச்சந்திரனின் நான்காவது வருட ஞாபகார்த்தமாக கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி நேற்று (18) சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இலங்கை ராம் கராத்தே சம்மேளன தலைவர் ஷிகான் கே.சந்திரலிங்கம் தலைமையில், சம்மேளனத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர்
ஷிகான் கேந்திரமூர்த்தி கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ.ரூபசாந்தன் உள்ளிட்ட இதர அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் கடந்த கால விளையாட்டு உபாதைகளுக்கான இயன் மருத்துவ சேவைகளை வழங்கியமைக்காக இயன் மருத்துவர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் நினைவு சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பயிற்றுவிப்பாளர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கண்டி திருகோணமலை அம்பாறை மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு மாவட்ட கராத்தே அணிகள் போட்டியில் பங்கேற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :