அமைப்பின் தற்போதைய தலைவர் B.M. அல் நஹ்தி மற்றும் செயலாளர் M.A.M. சியாம் தலைமையில், நிறைவேற்று உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடாதிபதி பேராசிரியர் M.M. பாஸில் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆலோசகரும் வாய் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணருமான டொக்டர் ஷஸ்லி ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு உரையாற்றிய பேராசிரியர் M.M. பாஸில் மாணவர்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல்வறு கருத்துக்களை முன்வைத்தார். அவரது உரையில் “நீங்கள் எல்லோரும் நாளைய தலைவர்கள்; உங்களுக்கு வானமே எல்லை” என்ற அவரது வார்த்தைகள் மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தன.
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய டொக்டர் ஷஸ்லி ஹமீத், தனது பல்கலைக்கழக வாழ்க்கை அனுபவங்களையும், கல்வி பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் பகிர்ந்துகொண்டார். அவரது உரை மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக அமைந்தது.
மேலும், அமைப்பின் 2025 ஆம் ஆண்டு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். அமைப்பின் வரலாறு, பணி மற்றும் நோக்கங்கள் குறித்து முன்னாள் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்ததுடன், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய அதிதிகள், மாணவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் செயலாளர் உரையாற்றினார்.





.jpeg)

0 comments :
Post a Comment