அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களாக எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், கே. கோடீஸ்வரன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே மற்றும் பிரியந்த விஜேரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், சமூக நல நடவடிக்கைகள், மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :