தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2026.27 ஆம் திகதி பீடத்தின் விசேட கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பீடாதிபதி அஷ்-ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் தலைமையேற்றார். நிகழ்வில் அரபுமொழித் துறையின் துறைத்தலைவர் ஏ.எம். றாசிக் மற்றும் மாணவர் நலப் பிரிவின் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் 2023/2024 கல்வியாண்டிற்கான மாணவர் சங்க நிர்வாகிகளுக்கான நியமனங்கள், Universities Act No. 16 of 1978 மற்றும் அதனுடைய திருத்தங்களும் மற்றும் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கும் இணங்க, 2026 பெப்ரவரி 5ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு அல்லது கல்வியாண்டு நிறைவடையும் வரை (எது முதலில் நிகழுமோ அது வரை) அமுலில் இருக்கும் வகையில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்:

நிர்வாகிகள்:
தலைவர்: எம்.ஏ. அஸ்ஜாத்
உப தலைவர்: டி.எஸ்.டி. நவீத்
செயலாளர்: டி. அதீக் அன்சாப்
கனிஷ்ட பொருளாளர்: என்.எம். சிராஜ்தீன்
தொகுப்பாசிரியர்: ஜே.எம். ஜாபிர்


உறுப்பினர்கள்:
எம்.ஆர்.எம். தஸ்ரிப்
எம்.எச். அஃப்லால் ஹசன்
எம்.எம். சமீல்
ஏ.எம். சஜித்
என்.பி. ருனைசா
என்.எப். சஜானி
எல்.எல். சவ்தா
எம்.எப்.எப். ஸம்ஹா


நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய பீடாதிபதி அஷ்-ஷெய்க் முனாஸ், மாணவர் சங்கங்கள் என்பது மாணவர்களையும் பல்கலைக்கழகத்தையும் இணைக்கும் முக்கிய பாலமாக செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். அவை மாணவர்களை நல்வழிப்படுத்தி, பல்கலைக்கழகத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் பேணும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், கடந்தகால மாணவர் சங்கங்கள் பல்கலைக்கழகத்தின் நற்பெயரை உயர்த்தியதுடன், பீடத்தின் அபிவிருத்திக்கும் பெரும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதுபோன்ற முன்னுதாரணங்களை புதிய நிர்வாகமும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

மாணவர் சங்கம் முன்னெடுக்கும் நல்ல செயல்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, கடந்தகாலங்களில் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களில் தலைமை வகித்த பலர் இன்று நாட்டின் முக்கிய தலைவர்களாக உயர்ந்துள்ளதையும் நினைவுகூர்ந்த அவர், புதிய நிர்வாகமும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, சமூக நலனிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் பங்காற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வு உற்சாகமும் எதிர்பார்ப்பும் நிறைந்த சூழலில் நிறைவுற்றது.




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :