பொதுமக்களுக்கான அரச சேவைகளின் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் சேவைகளை வழங்கும் நடைமுறைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நிபுணர்களின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் மூலோபாயக் கொள்கை முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த உயரிய நியமனம் இடம்பெற்றுள்ளது. இதன் கீழ், பல துறைகளில் சிறப்பு அறிவு கொண்ட நிபுணர்களை இணைத்துக் கொண்டு, அமைச்சுக்கு உயர்மட்ட ஆலோசனைகள் வழங்கும் வகையில் இந்த ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால், அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் திரு. ருவன் சேனாரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் திரு. எஸ். அலோகபண்டார ஆகியோரும் கலந்துகொண்டு, புதிய ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கல்வி, கலாசாரம், சமூக அபிவிருத்தி மற்றும் நிர்வாகத் துறைகளில் பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் பெற்றுள்ள நீண்டகால அனுபவமும், கல்விசார் பங்களிப்புகளும், பொதுச் சேவைத் துறையை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பொதுமக்கள் எதிர்நோக்கும் நிர்வாக சவால்களுக்கு நடைமுறை சார்ந்த தீர்வுகளை முன்வைப்பதில் இவரது ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும் என அமைச்சுத் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பொதுச் சேவைத் துறையை மக்கள் நட்பு சேவையாக மாற்றும் தேசிய முயற்சியில் பங்கெடுத்து செயல்படவுள்ள பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவினருக்கும், கல்விசார் சமூகமும் பொதுமக்களும் தமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
.jpg)

0 comments :
Post a Comment