சம்மாந்துறையில் புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் 𝟐𝟎𝟐6ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் இன்று (01) வியாழக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்ட, பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்கள் மற்றும் இயற்கை அனர்த்தினால் உயிர் இழந்தவர்களுக்கும் இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சத்தியபிரமாண உறுதிமொழியை வாசித்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டதுடன், நிறைவாக தவிசாளரின் விசேட உரையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், சம்மாத்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், பிரதேச சபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :