கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி பாடசாலைகளுக்கான உபகரணங்கள் கையளிப்பும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை (16) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு முன்பள்ளி பாடசாலைகளுக்கான ஒதுக்கீட்டு கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன் பள்ளி பாடசாலைகளின் தவிசாளர் அமினுதீன், அம்பாரை மாவட்ட முன்பள்ளி பாடசாலைகளின் பணிப்பாளர் நிசாந்த குமார, அதன் உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர், அதன் உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment