உயிரிழப்புகள், பாதிப்புகள் அதிகம்: கண்டி மாவட்டத்தில் அனர்த்த பிரதேசங்களுக்குச் சென்ற மு.கா.தலைவர் ஹக்கீம்



ஊடகப் பிரிவு-
நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மண் சரிவு , வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவற்றில் கண்டி மாவட்டத்திலேயே அதிகமான மரணங்கள் சம்பவித்தும், பாதிப்புகள் ஏற்பட்டும் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடந்த மூன்று தினங்களாக கண்டி மாவட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ,மக்களைச் சந்தித்து வருவதோடு, நிவாரணங்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

ஹாரிஸ்பத்துவ தொகுதியில் அங்கும்புறைக்கு அண்மையில் விலானகம,ரம்புக்எல கிராமத்தில் பாரிய அனர்த்தம் நிகழ்ந்திருப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு சென்று அனர்த்தத்தைப் பார்வையிட்டதோடு, ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் லுக்மான் ஹாஜியார் உடனும்,மற்றும் அங்குள்ள அனர்த்த நிவாரண குழுவினருடனும் கலந்துரையாடி இருக்கிறார். அதன் போது 29 பேர் வரை மரணித்திருப்பதாகவும் அவர்களில் 11 பேரின் ஜனாஸாக்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாஸாக்களை மீட்கும் விடயத்தில் அரசாங்கத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்று ஊர் மக்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் .அதே வேளையில் பிரதேச மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஜனாஸாக்களை மீட்டெடுப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதிலும் கூடிய கரிசனை காட்டி வருவதாக அவரிடம் கூறப்பட்டிருக்கிறது.

பிரஸ்தாப கள விஜயத்தில் கண்டி மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச். அனீஸ்தீன், கட்சியின் உயர் பீட உறுப்பினர் எஸ்.எம்.ரிஸ்வி,தும்பனை பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரிம்சாட் ஆகிய சிலரும் அவரோடு இணைந்திருந்தனர்.

அக்குறணையில் பெ ரிய பள்ளிவாசலின் கீழ்புறமாக உள்ள
சிற்றாற்றில்(ஓடை)பகுதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிலர் மரணத்ததாக அறிந்து அங்கும் சென்றுள்ளார்.

அனர்த்தங்கள் காரணமாக மண்ணுள் புதையுண்டமை போன்றவற்றால் காணாமல் போனவர்கள் என சந்தேமின்றி தெரியவருபவர்களையும் மரணித்தவர்களாகக் கருதி மரண சான்றிதழ் வழங்குவதன் சாத்தியம் பற்றி, புதிதான சுற்று நிருபமொன்றின் கீழ் ஆலோசித்து வருவதாக அக்குறணை பிரதேச செயலாளர் ,தம்மை சந்தித்த கண்டி பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்ந ரியாஸ் பாரூக் ஆகியோரிடம் கூறியுள்ளார்.

அத்துடன் செவ்வாய்கிழமை(2)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன்,சாணக்கியன் ,முன்னாள் எம்.பி எம்.ஏ.சுமந்திரன் போன்றோருடன் கம்பளை உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவில் அப்லண்ட் ஹதபிம விலேஜ் மண் சரிவு நடந்த இடத்தையும் சென்று பார்வையிட்டிருந்தார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்த உடகம்பலாத்த,மாவதுற கணபதி தோட்டத்திற்கும் அந்த உறுப்பினர்கள் சகிதம் அவர் சென்றிருந்தார்.

இல்லவத்துறை மற்றும் தேவராஜ மாவத்த பள்ளிவாசல்களுக்கும் (தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களுடன்)மற்றும்.கஹட்டபிடிய போன்ற பல பிரதேசங்ளுக்கும் அவர் சென்றிருந்தார்.

கம்பளை நகர சபையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலும் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாதிப்புக்குள்ளான இன்னும் சில ஊர்களுக்கும் திங்கள்,செவ்வாய் ,புதன் கிழமைகளில் அவர் சென்றிருந்தார்.
மிகவும் பாதிப்புக்கு உள்ளான தெல்தோட்டைக்கு செல்கின்ற பாதைகள் முற்றாக சீர்கெட்டிருப்பதன் காரணமாக அங்கும் செல்வதற்கு தாமதமாகின்ற போதிலும் அதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அத்துடன்,வடக்கு,கிழக்கு,மேல் மாகாணங்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்துப் பிரதேசங்களின் நலனிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரோடும் அவர் தொடர்பில் இருந்து வருகின்றார்.

முன்னதாக, கம்பளையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறிய விடயம் "எதிர் கட்சி இந் நாள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் இந்த கம்பளை பிரதேசத்துக்கு வருகை தந்திருப்பதன் நோக்கம் இங்குள்ள மக்கள் அதி கூடிய பாதிப்புக்களை அனுபவித்திருப்பதனாலாகும்.

பலரும் பல இடங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான சாணக்கியன்,தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன், திலித், அனுராத ஜயரட்ண என பலரும் இங்கு வந்தமைக்கான காரணம் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் எவ்வித இன மொழி பேதமும் இன்றி இந்த பாரிய பேரிடரில் இருந்து மக்களை மீட்டெடுப்பது மட்டுமன்றி, இப் பேரிடருக்கு முழுமையான நிவாரணங்களையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் முழு வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்கின்ற ஒரு முடிவுடனாகும் என்பதைக் கூறிக் கொண்டு, இங்கிருந்து இன்னும் பல இடங்களுக்கு செல்லவும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம் "என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :