டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, துருக்கி அரசு இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு உலர் உணவுப் பொதிகள் அடங்கிய 3,000 பெட்டிகளை மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது.
இந்த உதவிகள் இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமி லுட்டு ருக்குட் மற்றும் துருக்கி நாட்டின் ‘ரிக்கா’ உதவித் திட்ட நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், இலங்கை அனர்த்த மேலாண்மை மையத்தில் வைத்து அனர்த்த நிவாரண பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுகொட அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந்த மனிதாபிமான உதவி, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படுத்தப்படவுள்ளது.


0 comments :
Post a Comment