ECM மின் புதிய பரிணாமம் சம்மாந்துறையில் ECM Campus கோலாகல திறப்பு விழா!



ம்மாந்துறை மண்ணில் ECM Campus தனது கல்விசார் சேவைகளை விரிவுபடுத்தி, மாணவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கான பல்வேறு கற்கைநெறிகளை தேவையுடயோரின் காலடிக்குச் கொண்டு செல்லும் வகையில் தனது கல்வி நிறுவனத்தை 2025.09.24 ஆம் திகதி திறந்து வைத்தது.

கல்வியாளர்கள் அதிதிகள் புடைசூழ ECM நிறுவனத்தின் ஸ்தாபகரும் நாபீர் பௌண்டேசனின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் திறந்து வைத்தார்.

கல்வி நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய கலாநிதி நாபீர், பொதுவாக, எந்த ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அது தலைநகரில்தான் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் சிந்தனை. அங்கு அதிக வாய்ப்புகள், அதிக வசதிகள் என்பதால் அங்கே ஆரம்பிக்க வேண்டும் என்பதே வழக்கம். ஆனால் தனது சிந்தனை அதற்கு மாறானது என்றும்

நான் தொடங்கும் எந்த நிறுவனமும் என் மண்ணிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே என் கனவு. அதனால் தான், என் முதலாவது கட்டுமான நிறுவன அலுவலகத்தையும் சம்பாந்துறையிலே ஆரம்பித்தேன். இன்று அதே அடிப்படையில் Educational College of Management – ECM Campus என்பதையும் சம்மாந்துறையிலே ஆரம்பிக்கிறேன் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன் என்றார்.

இது சம்மாந்துறை மக்களுக்கு மட்டும் அல்ல.அனைத்து இளைஞர்களுக்கும் திறந்த ஒரு கல்வி வாய்ப்பு. ECM Campus இன்றைய தலைமுறைக்கு தேவையான கல்வி, திறன், மற்றும் வேலை வாய்ப்பை ஒருங்கிணைத்து வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இங்கு நடைபெற இருக்கும் பாடநெறிகள் இரண்டு முக்கியமான வகைகளில் அமைக்கப்பட்டுள்ளன:

1. டிஸ்டன்ஸ் எடுகேஷன் மூலம் வழங்கப்படும் சர்வதேச பட்டப்படிப்பு பாடநெறிகள்.

இவை லண்டன், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் அனுபவமிக்க பேராசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் நடத்தப்படும். மாணவர்கள் வெளிநாடு செல்லாமல், இங்கிருந்தே உலகத் தரம் வாய்ந்த கல்வியை பெற முடியும்.

2. O/L மற்றும் A/L முடித்த பின் அடுத்த நிலையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறும் மாணவர்களுக்கு தொழில்முகப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்.

பல பெற்றோர்களும், மாணவர்களும் “அடுத்து என்ன படிக்க வேண்டும்? எந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று தெரியாமல் நிற்கிறார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக ECM Campus ஒரு வழிகாட்டியாக நிற்கிறது.

மேலும், இங்கு ஆறு மாத பாடநெறிகளை முடித்த மாணவர்கள் முழுமையான தொழில்முறை திறமைகளைப் பெற்றவர்களாக உருவாக்கப்படுவர். அவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான விசாக்கள் பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு, கல்வியோடும் வேலைவாய்ப்போடும் இணைந்த ஒரு முழுமையான திட்டத்தை ECM Campus வழங்குகிறது.

நான் சமீபத்தில் அக்கரைப்பற்றுக்கு விஜயம் செய்தபோது, பல மாணவர்கள் “பல்கலைக்கழகம் எங்கு செல்ல வேண்டும்? எந்த பாதையை எடுக்க வேண்டும்?” என்று குழப்பத்துடன் இருந்தனர். அதே நிலை சம்மாந்துறையிலும், நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கிறது. இந்த சவாலுக்கு ஒரு பதில் அளிக்கும் வகையில் தான் ECM Campus நிறுவப்பட்டுள்ளது.

எனது வேண்டுதல் – இங்கு படிக்கும் மாணவர்கள் கல்வியுடன் மட்டுமல்லாமல், நல்லொழுக்கத்திலும், சமூக சேவையிலும், உலகளாவிய போட்டித் திறனிலும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்றும் குறிப்பிட்டார்.

பல வருடங்களாக கல்வித் துறையில் அனுபவம் பெற்ற ECM Campus, மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் பட்டப்படிப்பு மற்றும் தொழில்துறை பயிற்சிகளை வழங்கும் நோக்கில் குறித்த கல்வி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தது.

இன்றைய பொருளாதார சவால்களால் பட்டப்படிப்பு கனவுகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு ECM Campus ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. “கல்விக்கான தடைகளை உடைத்து, கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பு” என நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கான வழக்கமான பாடநெறிகளுக்கு அப்பாற்பட்டு, மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ள துறைகளில் Diploma மற்றும் தொழில்துறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் Document Controller, Accountant, Store Keeper, Office Assistant, Receptionist உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளடக்கிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ECM Campus வழங்கும் பாடநெறிகள் Theoretical & Practical Training அடிப்படையில் நடத்தப்பட்டு, மாணவர்கள் சர்வதேச தரத்திலான சான்றிதழ்களைப் பெறுவார்கள். மேலும், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் Online Class மற்றும் Postal Course மூலம் கற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம், சிங்களம், தகவல் தொழில்நுட்பம், கவுன்சிலிங் போன்ற துறைகளில் மாணவர்களுக்கும், தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
















 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :