தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி ஆட்சியின் ஒரு வருடம் – சாய்ந்தமருது பள்ளிவாசலில் ஜனாதிபதிக்காக சிறப்பு துஆப் பிரார்த்தனை!



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தேகாரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நாட்டின் சுபீட்சத்துக்காக சிறப்பு துஆப் பிரார்த்தனை நேற்று (திங்கட்கிழமை) சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசலின் உதவித் தலைவரும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவருமான மௌலவி எம்.எம்.எம். சலீம் (ஷர்க்கி) தலைமையில் இடம்பெற்றது.

இதில், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பங்கேற்றார். மேலும், பள்ளிவாசலின் பேஷ்இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதி தலைமையில் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

அதிகளவான ஜமாஅத்தார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், நாட்டின் மறுமலர்ச்சி, சமநீதியுடனான ஆட்சி, மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தொடர்ந்தும் நாட்டை வழிநடத்த பிரார்த்திக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்கது என்னவெனில், 2024 செப்டம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி பதவியேற்ற அனுரகுமார திசாநாயக்க, கடந்த ஒரு வருடகாலத்தில் ஊழல் ஒழிப்பு, நல்லாட்சித் திட்டங்கள், மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் என பல துறைகளில் புதுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்து அயராது உழைக்க இறைவன் சக்தி அருள வேண்டியும், அவரின் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் வேண்டியும் நடைபெற்ற இந்த துஆப் பிரார்த்தனை, சாய்ந்தமருது மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.



 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :