அர‌பா தின‌மும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முஃப்தியும்



அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தில் எப்போதும் க‌ருத்து வேறு பாடு இருக்கும் என்கிறார் ம‌ருத‌முனை முபாற‌க் ச‌லபி ம‌த‌னி.
க‌ருத்து வேறுபாடு என்ப‌து எல்லா விட‌ய‌த்திலும் இருக்கும். ஆனாலும் ந‌பி வ‌ழியில் நேர‌டியாக‌ வ‌ழி காட்ட‌ல் இருந்தால் அதில் க‌ருத்து வேறு பாடு கொள்வ‌து த‌வ‌று. அது ம‌னோ இச்சையின் பிர‌திப‌ல‌ன்.

க‌ருத்து வேறுபாட்டை நீக்க‌ வேண்டுமாயின் ஹ‌தீத்ப‌டி வாழ‌ வேண்டும் என்ப‌தால்தான் முபாற‌க் ச‌ல‌பி ம‌த‌னி, போன்றோர் உருவாகி விட்டு இப்போது அர‌பா விட‌ய‌த்தில் நேர‌டி ஹ‌தீதுக்கு முர‌ண்ப‌டும் ச‌வூதி உல‌மாக்க‌ள் க‌ருத்தை நியாய‌ப்ப‌டுத்துகிறார்.

"அர‌பா நாள் நோன்பு" என்றுதான் ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்னார்க‌ளே த‌விர‌ துல் ஹ‌ஜ் 9ன் நோன்பு என‌ சொல்ல‌வில்லை.

ஒரு இட‌த்தின் பெய‌ரால் ஒன்று அழைக்க‌ப்ப‌டுமாயின் அந்த‌ இட‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌தே அர்த்த‌மாகும். வ‌ருட‌த்தில் ஒரு நாள்தான் அர‌பா தின‌மாகும். அன்று ம‌ட்டும்தான் ஹாஜிக‌ள் கூடும் தின‌மாகும்.

அந்த‌ அர‌பா தின‌ம் எப்போது என்ப‌தை முன் கூட்டி தெரியாத‌ ம‌க்க‌ள் த‌ம‌க்கு விரும்பிய‌ ஒரு தின‌த்தை அர‌பா என‌ நினைத்துக்கொள்ள‌லாம். தெரிந்து விட்டால் அன்றைய‌ தின‌த்தில்தான் நோன்பு நோற்க‌ வேண்டும்.

முன்னைய‌ கால‌ங்க‌ளில் ம‌க்காவை சுற்றி இருக்கும் கிராம‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் எப்போது ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடும் அர‌பா தின‌ம் என்ப‌து தெரிந்திருக்கும். ஏனைய‌ ம‌க்க‌ளுக்கு அதாவ‌து இன்றிருக்கும் ரியாத் போன்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளுக்கு கூட‌ எப்போது அர‌பாவில் ஹாஜிக‌ள் என்ப‌து தெரியாம‌ல் இருந்திருக்கும். தெரியாத‌ நிலையில் ஏதோ ஒரு நாளை, ம‌க்காவில் பிறை 9 அன்று ரியாதில் பிறை 8 அல்ல‌து 7 ஆக‌வும் இருந்த‌ நாளில் அர‌பா என‌ நினைத்து நோன்பு பிடித்திருக்க‌லாம். இதை இறைவ‌ன் ம‌ன்னிப்பான். ஆனால் இப்போது உல‌க‌ம் முழுவ‌தும் ம‌க்காவுக்குள் இருக்கும் கிராம‌ங்க‌ள் போலாகிவிட்ட‌ன‌.

எப்போது ஹாஜிக‌ள் அர‌பாவில் கூடுகிறார்க‌ள் என்ப‌து 9 நாட்க‌ளுக்கு முன்பே உல‌க‌ம் முழுவ‌தும் தெரிந்து விடுகிற‌து.

இவ்வாறு தெரிந்த‌ பின்பும் அர‌பா தின‌ம் எப்போது என்ப‌து க‌ருத்து வேறுபாடு என‌ ம‌ருத‌முனை முபாற‌க் ச‌ல‌பி போன்றோர் சொல்வ‌து உண்மையை தெரிந்து கொண்டு ம‌றைப்ப‌தாகும்

ஒரு விச‌ய‌ம் ப‌ற்றி தெரியாத‌ போதுதான் இஜ்திஹாத் தேவை. தெளிவான‌ விட‌ய‌த்தில் இஜ்திஹாதுக்கு இட‌மில்லை.

ம‌க்காவின் பிறை 9ல் ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று கூடுவார்க‌ள். அதுதான் அர‌பா தின‌ம். அந்த‌ அர‌பா தின‌த்தில் உல‌க‌ முஸ்லிம்க‌ள் நோன்பு நோற்ப‌து சுன்ன‌த்.
அர‌பாவில் ஹாஜிக‌ள் ஒன்று கூடிய‌ தின‌த்துக்கு ம‌றுநாள் அர‌பா தின‌ம் இல்லை. ம‌க்காவில் பிறை காண‌ப்ப‌ட்ட‌ நாளில் உல‌க‌ம் முழுவ‌தும் பிறை தெரியும். இல‌ங்கையிலும் காட்சி த‌ரும் முத‌ல் பிறையை காணாம‌ல் விட்டு விட்டு த‌டுமாறுகிறார்க‌ள். அந்த‌ த‌வ‌றுக்கு நியாய‌ம் சொல்ல‌ எதை எதையோ சொல்லி வ‌ழி கெடுக்கிறார்க‌ள்.
அவுஸ்திரேலியாவில் இருந்து க‌ன‌டா க‌ட‌ந்து செல்ல‌ புற‌ப்ப‌ட்ட‌ விமான‌ம் இல‌ங்கை வ‌ழியாக‌ செல்லும் போது அது இல‌ங்கையில் தெரியாம‌ல் ம‌க்காவிலும் க‌ன‌டாவிலும் தெரிந்த‌ நிலையில் இல‌ங்கையில் தெரிய‌வில்லை என்ப‌த‌ற்காக‌ விமான‌மே ப‌ற‌க்க‌வில்லை என‌ கூறும் முட்டாள்த‌ன‌மாகும்.

அர‌பா நாள் நோன்பு என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்ன‌து தெளிவாக‌ இல்லையா? என்ன‌ ம‌ட‌மை இது?
துல் ஹ‌ஜ் 9ம் நாள் நோன்பு பிடியுங்க‌ள் என்று ஹ‌தீத் வ‌ந்திருந்தால் எந்த‌ ஊர் 9 என‌ கேட்க‌லாம்.
அல்ல‌து அர‌பா மைதான‌ம் என்ப‌து ம‌க்காவிலும், இல‌ங்கையிலும் இருக்குமாயின் எந்த‌ நாட்டு அர‌பா என்றாவ‌து கேட்க‌லாம்.

அர‌பா நாள் எப்போது என்ப‌து தெரிந்த‌ ம‌க்கா வாசிக‌ள் அர‌பா நாளில் நோன்பு பிடியுங்க‌ள், தெரியாத‌ வேறு ஊர் ம‌க்க‌ள் அடுத்த‌ நாள் பிடியுங்க‌ள் என‌ ந‌பிய‌வ‌ர்க‌ள் சொன்னார்க‌ளா? இல்லை.

கால‌ங்க‌ள் மாறும், இன்ட‌ர்நெட் கால‌ம் வ‌ரும், அப்போது எப்போது அர‌பா தின‌ம் என்ற‌ ம‌க்காவின் அறிவிப்பை ஒரு செக்கன்டில் உல‌க‌ம் தெரியும் என்ப‌தை தெரிந்துதான் இறைவ‌ன் ந‌பிய‌வ‌ர்க‌ளை வ‌ஹி மூல‌ம் அர‌பா நாளில் நோன்பு பிடியுங்க‌ள் என‌ பேச‌ வைத்தான்.

அரபா நாள் என்றும், அர‌பா என்ப‌து ம‌க்காவில்தான் உள்ள‌து என்றும், அர‌பாவில் ஹாஜிக‌ள் கூடும் நாள்தான் அர‌பா நாள் என‌ தெளிவாக‌ தெரிந்திருக்க‌ இவ‌ர்க‌ள் அர‌பா நோன்பு என்ற ர‌சூலுள்ளாவின் வார்த்தை தெளிவ‌ற்ற‌து என‌ சொல்வ‌து க‌ண்மூடித்த‌ன‌மான‌ பின்ப‌ற்றுத‌லும் ந‌பிய‌வ‌ர்க‌ள் தெளிவாக‌ சொல்ல‌வில்லை என்ற‌ அபாண்ட‌முமாகும்.

ஆக‌வே,
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழன் 05.06.2025 அன்று ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் நாளாகும். எனவே அன்றைய தினம் அரபா நோன்பாகும்.
வெள்ளிக் கிழமை 06.06.2025 அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளாகும்.

இல‌ங்கை முஸ்லிம்க‌ளும் ம‌க்காவில் ஹாஜிக‌ள் அரபாவில் கூடும் நாளான‌ 5ம் திக‌தி நோன்பு பிடிப்ப‌தே சுன்ன‌த்தாகும்.

ஊரோடு சேர்ந்து பெருநாளை ம‌று நாள் அல்ல‌து அத‌ற்கு ம‌றுநாளும் கொண்டாட‌லாம்.

இவ்வாறு ம‌க்கா பிறையை ஏற்ற‌ ம‌க்க‌ள் ஊரில் அதிக‌ம் இருந்தால் அவ‌ர்க‌ள் 6ந்திக‌தி ஹ‌ஜ் பெருநாள் எடுக்க‌லாம். குறைந்த‌ எண்ணிக்கையில் இருந்தால் பெருநாளை ம‌றுநாளும் எடுக்க‌லாம் என்று ந‌பி வ‌ழி காட்ட‌ல் உள்ள‌தால் 5ந்திக‌தி நோன்பு நோற்று ம‌றுநாள் பெருநாள் தொழாது ந‌ம‌து நாட்டு அர‌ச‌ அறிவித்த‌ல் ப‌டி 7ந்திக‌தி பெருநாள் எடுக்க‌லாம்.

முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முஃப்தி
த‌லைவ‌ர்
ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌துல் உல‌மா க‌வுன்சில்









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :